ADVERTISEMENT

உலகளவில் உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!! துபாயில் 400 திர்ஹம்ஸை கடந்து விற்பனை.!!

Published: 17 Apr 2025, 8:19 PM |
Updated: 17 Apr 2025, 8:19 PM |
Posted By: admin

உலகளாவிய பொருளாதார பதட்டங்கள் மற்றும் பலவீனமான அமெரிக்க டாலர் காரணமாக துபாயிலும் உலக அளவிலும் தங்கத்தின் விலைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது துபாயில் தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து, ஒரு கிராமுக்கு 400 திர்ஹம்ஸ்க்கும் மேல் இன்று வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலகளவில் நிலவிய பொருளாதார மாற்றங்களால் ஏற்பட்ட இந்த திடீர் விலை உயர்வின் காரணமாக, இன்று துபாயில் தங்கத்தின் விலைகள் பல மடங்கு அதிகரித்து 24 காரட் தங்கம் கிராமுக்கு 402.75 திர்ஹம்ஸ் ஆகவும், 22 காரட் தங்கம் கிராமுக்கு 372.75 திர்ஹம்ஸ் ஆகவும், 21 காரட் தங்கம் கிராமுக்கு 357.50 திர்ஹம்ஸ் ஆகவும் மற்றும் 18 காரட் தங்கம் கிராமுக்கு 306.50 திர்ஹம்ஸ் ஆகவும் விற்கப்பட்டுள்ளது. மேலும்உலகளவில் அவுன்ஸ் ஒன்றுக்கு 3,342.22 டாலர்  (3.72%) வரை உயர்ந்துள்ளது.

விலை உயர்விற்கான காரணம்?

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் பலவீனமான அமெரிக்க டாலர் மதிப்பானது தங்கத்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குவதும், அமெரிக்க வர்த்தக கட்டணங்கள் உலகளாவிய உறுதியற்ற தன்மை குறித்த அச்சங்களை எழுப்புவதும் காரணமாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் மத்திய வங்கிகள் ஒரு பாதுகாப்பான சொத்தாக தங்கத்தை வாங்கி வருவதும் முக்கிய காரணமாகும். இது தவிர அமெரிக்காவில் குறைந்த வட்டி விகிதங்கள் பிற முதலீடுகளின் மீதான வருமானத்தைக் குறைத்து, தங்கத்தை மேலும் கவர்ச்சிகரமானதாக ஆக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, பணவீக்க அச்சங்கள் மற்றும் பலவீனமான டாலர் ஆகிய காரணிகளாலே தங்கம் விலை அதன் முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் டாலர் தவிர்த்து தங்கம் மற்றும் யென் போன்ற பாதுகாப்பான சொத்துக்களுக்கு மாறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel