சவூதி அரேபியாவில் இன்று துல் ஹஜ் மாதத்திற்கான பிறை பார்க்குமாறு அறிவித்திருந்த நிலையில் இன்று பிறை தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறை தென்பட்டதை தொடர்ந்து மே 27 ஆம் தேதியான இன்று துல் காயிதா மாதத்தின் கடைசி நாள் என்றும் நாளை மே 28 துல் ஹஜ் மாதத்தின் முதல் தேதியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வழக்கப்படி துல் ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளில் ஈத் அல் அத்ஹா பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, ஜூன் 6 ஆம் தேதி ஈத் அல் அத்ஹாவாக இருக்கும். அத்துடன் ஜூன் 5 ஆம் தேதி அரஃபா தினமாக இருக்கும். துல் ஹஜ் மாதத்தில் இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித மக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்.
இந்த பயணம் ஈத் அல் அத்ஹா பண்டிகையோடு முடிவடையும். ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் போன்ற மற்ற வளைகுடா நாடுகளும் சவுதி அரேபியாவையே பின்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel