ஷார்ஜாவில் உள்ள தொழில்துறை பகுதியில் இன்று (புதன்கிழமை) திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை மண்டலமாக காட்சி அளித்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெளியான தகவலின் படி, இன்று சுமார் மாலை 6 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டதாகவும், அடுத்த சில நிமிடங்களிலேயே தீயானது தீவிரமாக பரவி அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு குழுக்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அப்பகுதியில் தொடர்ந்து சைரன் ஒலி கேட்டதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இந்த தீவிபத்திற்கான காரணம் குறித்த தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
Massive fire breaks out behind #lulu Al wahda at sharjah, hope everyone nearby are safe and rescued. pic.twitter.com/B7ne3dZW5S
— Siva😎😎😎 (@newsmaker31) October 15, 2025