ADVERTISEMENT

ஷார்ஜாவில் உள்ள முக்கிய சாலையில் இன்று முதல் தற்காலிக மூடல் அறிவிப்பு..!!

Published: 17 Oct 2025, 10:30 AM |
Updated: 17 Oct 2025, 10:30 AM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), யுனிவர்சிட்டி ஹாஸ்பிட்டலுக்கு அருகில் அமைந்துள்ள முகமது பின் மூசா அல்-குவாரிஸ்மி ஸ்ட்ரீட்டை (Mohammed bin Musa Al-Khwarizmi Street) தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து ஓட்டம் மற்றும் சாலை செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அத்தியாவசிய சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த மூடல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று (அக்டோபர் 17, வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூடல் அமலில் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

எனவே, இந்த காலகட்டத்தில் வாகன ஓட்டுநர்கள் தங்கள் பாதைகளை முன்கூட்டியே திட்டமிடவும் பராமரிப்பு காலத்தில் மாற்று சாலைகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், சீரான இயக்கம் மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, போக்குவரத்து பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கவும் திசை அடையாள பலகைகளைப் பின்பற்றவும் ஓட்டுநர்களை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel