வளைகுடா நாடுகளில் புகழ்பெற்று விளங்கும் லுலு ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதன் நிகர லாபம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.5% சதவீதம் அதிகரித்து 163 மில்லியன் டாலராக உள்ளது என கூறப்பட்டுள்ளது. பிராந்திய சில்லறை விற்பனை நிறுவனமான இந்த நிறுவனம் வளைகுடா முழுவதும் தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருவதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
மேலும், புதிய உணவு மற்றும் மின்னணு பொருட்களின் வலுவான விற்பனையால் நிறுவனத்தின் வருவாய் 4.7% அதிகரித்து 6 பில்லியன் டாலரை எட்டியுள்ளது என கூறப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல் லுலுவின் ஆன்லைன் விற்பனையும் வேகமாக வளர்ந்து, கடந்த ஆண்டை விட 33% அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் “எங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கிட்டத்தட்ட 5% அதிகரித்துள்ளது, லுலுவின் பொருட்களுக்கான வலுவான ஆர்வத்தைக் காட்டுகிறது” என்று லுலு ரீடெய்ல் ஹோல்டிங்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சைஃபி ரூபாவாலா கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்ட லுலு சில்லறை விற்பனை நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ஆறு புதிய விற்பனை நிலையங்களைத் திறந்தது, இதன் மூலம் 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்தம் 13 புதிய கடைகள் ஆக அதிகரித்துள்ளது, மேலும் அக்டோபரில் கூடுதலாக மூன்று கடைகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று ஆண்டுகளில், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் பிற GCC நாடுகளில் தோராயமாக 50 புதிய விற்பனை நிலையங்களை திறக்க லுலு திட்டமிட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
ஏற்கனவே, இந்த காலாண்டில் அமீரகத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் ஸ்டோர் மற்றும் சவுதி அரேபியாவில் ஒரு மினி மார்க்கெட் என இரண்டு சிறிய விற்பனை நிலையங்கள் மூடப்பட்டது. அதிக செயல்திறன் கொண்ட வடிவங்களில் கவனம் செலுத்துவதற்கான அதன் உத்தியின் ஒரு பகுதியாக இந்த மூடல்கள் இருப்பதாக லுலு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel