ADVERTISEMENT

அரசு ஊழியர்களுக்கு தேசிய தின விடுமுறையை அறிவித்த அமீரக அரசாங்கம்!!

Published: 17 Nov 2025, 2:16 PM |
Updated: 17 Nov 2025, 4:45 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம், தற்போது ஈத் அல் எதிஹாத் என்று அழைக்கப்படும் தேசிய தின கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், அதன் பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. அமீரக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அரசு ஊழியர்கள் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் விடுமுறையை அனுபவிப்பார்கள், பின்னர் டிசம்பர் 3, புதன்கிழமை மீண்டும் வேலைக்குத் திரும்புவார்கள் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விடுமுறை நாட்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வருவதால், இது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து மொத்தமாக நான்கு நாள் வாரயிறுதி கிடைக்கும். இந்த ஆண்டின் நீண்ட வார விடுமுறை ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வந்த அமைச்சரவைத் தீர்மானத்தால் சாத்தியமாக்கப்பட்டுள்ளது, இது சில பொது விடுமுறை நாட்களை வாரத்தின் நடுப்பகுதியில் வரும் வாரத்தின் தொடக்கம் அல்லது முடிவுக்கு மாற்ற அனுமதிக்கிறது. இருப்பினும், இந்த விதி அமைச்சரவையின் விருப்பத்திற்கு உட்பட்டது மற்றும் அனைத்து விடுமுறை நாட்களுக்கும் தானாகவே பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்படும் ஈத் அல் எதிஹாத், 1971 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு எமிரேட்கள் ஒருங்கிணைந்த வரலாற்று மைல்கல் தொடக்கத்தைக் கொண்டாடுகிறது. நான்கு நாள் விடுமுறை நாட்டின் ஒருங்கிணைந்த விடுமுறைக் கொள்கையுடன் ஒத்துப்போகிறது, இது பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இருவரும் ஒரே எண்ணிக்கையிலான ஊதிய விடுமுறைகளைப் பெறுவதை உறுதி செய்கிறது. தற்பொழுது அரசு ஊழியர்களுக்கான தேசிய தின விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது பட்சத்தில் விரைவிலேயே தனியார் துறை ஊழியர்களுக்குமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ADVERTISEMENT

தொடர் விடுமுறையில், குடியிருப்பாளர்கள் குடும்பத்துடன் இணைவதற்கும், ஒற்றுமையைக் கொண்டாடுவதற்கும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் திட்டமிடப்பட்ட பல நிகழ்வுகளை அனுபவிப்பதற்கும் அதிக நேரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT