ADVERTISEMENT

வாகன ஓட்டிகளுக்கான நற்செய்தி.. முதல் 10 நிமிடத்திற்கு கட்டணமில்லா பார்க்கிங்.. ஷார்ஜாவின் புதிய அறிவிப்பு..

Published: 18 Nov 2025, 12:09 PM |
Updated: 18 Nov 2025, 12:09 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் உள்ள வாகன ஓட்டிகள் பொது பார்க்கிங் இடத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் 10 நிமிட சலுகை காலத்தை தொடர்ந்து அனுபவிக்க முடியும் என்று ஒரு மூத்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

ஷார்ஜாசிட்டி முனிசிபாலிட்டியின் பொது பார்க்கிங் இயக்குனர் ஹமீத் அல் காத் அவர்கள், அல் காத் அல் முபாஷர் என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசிய போது, இந்த அமைப்பு ஓட்டுநர்களுக்கு ஒவ்வொரு புதிய பார்க்கிங் இடத்திலும் அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்பு புதிய 10 நிமிட அவகாசத்தை வழங்குகிறது என்று கூறியுள்ளார். இந்தக் கொள்கை விரைவான பணிகளை முடிக்க சில நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் வாகன ஓட்டிகளை ஆதரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஷார்ஜாவின் டிஜிட்டல் பார்க்கிங் ஸ்கேனர்கள் இரண்டு-படி செயல்முறையைப் பயன்படுத்தி செயல்படுகின்றன என்று அல் காத் விளக்கியுள்ளார். அதன்படி “ஸ்கேனிங் வாகனம் நிறுத்தப்பட்ட அனைத்து கார்களையும் பதிவு செய்து, பத்து நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சோதனை செய்யும் என்றும், அந்தக் காலத்திற்குள் பணம் செலுத்தப்பட்டால், எந்த மீறலும் வழங்கப்படாது. மேலும் இந்த கண்காணிப்பு ஸ்கேனரால் செய்யப்படுகிறதா அல்லது ஒரு ஆய்வாளரால் செய்யப்படுகிறதா என்பதைப் பொருட்படுத்தாமல் இந்த சலுகை காலம் பொருந்தும்” என்றும் அவர் விவரித்துள்ளார்.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, ஓட்டுநர்கள் புதிய பார்க்கிங் இடத்திற்கு மாறும்போது கூட 10 நிமிட சலுகைக் காலம் பொருந்தும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார். ஒவ்வொரு முறையும் இந்த அமைப்பு வேறு இடத்தில் ஒரு வாகனத்தைக் கண்டறிந்தால், அதை ஒரு புதிய நுழைவாகக் கருதி மற்றொரு சலுகைக் காலத்தை வழங்குகிறது. அதே பகுதியில் கார் முன்பு ஸ்கேன் செய்யப்பட்டிருந்தாலும், புதிய நுழைவைக் கண்டறிந்ததும் சலுகையானது புதுப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம், ஷார்ஜாவின் பார்க்கிங் அமைப்பு எந்தவொரு அபராதத்தையும் வழங்குவதற்கு முன்பு வாகன ஓட்டிகளுக்கு நியாயமான வாய்ப்பை வழங்குவதில் உறுதியாக உள்ளது என்று அல் கயீத் வலியுறுத்துகிறார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel