ADVERTISEMENT

துபாயில் 15 புதிய பார்க்கிங் சந்தா திட்டங்கள் அறிமுகம்.. 100 திர்ஹம்ஸ் முதல் தொடங்கும் மாத கட்டணங்கள்..!!

Published: 19 Nov 2025, 6:01 PM |
Updated: 19 Nov 2025, 6:01 PM |
Posted By: Menaka

துபாயின் பொது பார்க்கிங் சந்தா அமைப்பின் ஒரு பெரிய விரிவாக்கத்தை பார்கின் (Parkin) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி துபாயின் முக்கிய மண்டலங்களில் குடியிருப்பாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பார்க்கிங் வசதியை மேலும் நெகிழ்வானதாக மாற்ற 15 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட வகைகளைச் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

முக்கிய சிறப்பம்சங்கள்

  • சந்தா கட்டணங்கள் இப்போது மாதத்திற்கு 100 திர்ஹம்ஸ் முதல் 500 திர்ஹம்ஸ் வரை இருக்கும்.

மாதத்திற்கு 100 திர்ஹம்ஸ்: மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி ஊழியர்கள் (பணியிட இடம்/நிறுவனத்திலிருந்து 500 மீட்டருக்குள் சைடு ஸ்ட்ரீட் மற்றும் திறந்தவெளி பார்க்கிங்) பார்க்கிங் செய்வதற்கான மிகக் குறைந்த சந்தா வகையாகும்.
மாதத்திற்கு 500 திர்ஹம்ஸ்: பல மண்டலங்களில் நெகிழ்வான அணுகலுடன் சைடு ஸ்ட்ரீட் மற்றும் திறந்தவெளி பார்க்கிங்கிற்கு அதிக விலை கொண்ட வகையாகும்.

கூடுதலாக, பார்கின் பின்வரும் விலைகளில் பேக்கேஜ் களையும் அறிமுகப்படுத்தியுள்ளது:

ADVERTISEMENT
  • துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் மற்றும் துபாய் ஹில்ஸ் போன்ற பகுதிகளுக்கு மாதத்திற்கு தோராயமாக 467 திர்ஹம்ஸ் வீதம் 1,400 திர்ஹம்ஸ்க்கு மூன்று மாத விருப்பம் கிடைக்கிறது.

சைடு ஸ்ட்ரீட் மற்றும் திறந்தவெளி பார்க்கிங் போன்றவற்றை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட அமைப்பில் பயனர்கள் மாதம் 500 திர்ஹம்ஸ் முதல், ஒரே போக்குவரத்து கோப்பின் (traffic file) கீழ் 3 வாகனங்கள் வரை அணுகலாம். இது தினசரி பயணம் அல்லது ஷாப்பிங் செய்வதற்குப் பயனுள்ளதாக இருக்கும்.

பிரத்யேக திறந்தவெளி மட்டும் அனுமதிகள்

ADVERTISEMENT

B & D மண்டலங்கள்: நீண்ட கால அல்லது இரவு முழுவதும் 24 மணிநேரம் வரை பார்க்கிங் தேவைப்படும் பயனர்களுக்கு மாதத்திற்கு 250 திர்ஹம்ஸ் முதல் கிடைக்கின்றன.

முக்கிய மேம்பாட்டுப் பகுதிகள்

துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் (மண்டலம் H): 1,400 திர்ஹம்ஸ் விலையில் 3 மாதங்களுக்கு நெகிழ்வான பேக்கேஜ்கள் கிடைக்கும். 3 மாதங்களுக்கு 1,000 திர்ஹம்ஸ் கட்டணத்தில் வரையறுக்கப்பட்ட மண்டல அனுமதிகளை (limited zone permit) வழங்குகிறது.
துபாய் ஹில்ஸ் (631G): 3 மாதங்களுக்கு 1,400 திர்ஹம்ஸ் கட்டணம் முதல் 1 வருடம் வரை சந்தா கிடைக்கும்,
வாஸ்ல் ரியல் எஸ்டேட் மண்டலங்கள் (Wasl Real Estate W/WP zones): மாதம் 300 திர்ஹம்ஸ் முதல், செலவு குறைந்த நீண்ட கால விருப்பத்தை வழங்குகிறது.

குறைக்கப்பட்ட கட்டண வகைகள்

தனியார் கல்வி ஊழியர்களுக்கும் குறைக்கப்பட்ட கட்டண பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அவர்கள் A, B, C மற்றும் D மண்டலங்களில் தங்கள் பணியிடத்திலிருந்து 500 மீட்டருக்குள் சைடு ஸ்ட்ரீட் மற்றும் திறந்தவெளியில் நிறுத்துவதற்கு 100 திர்ஹம்ஸிலிருந்து மாதாந்திர அனுமதிகளைப் பெறலாம். அதேபோல், மாணவர்களும் தங்கள் கல்வி நிறுவனத்திலிருந்து 500 மீட்டருக்குள் மாதத்திற்கு 100 திர்ஹம்ஸிலிருந்து இதே போன்ற சலுகைகளைப் பெறலாம்.

நகர மையத்தில் நீண்ட நேரம் பயன்படுத்தும் பயனர்கள்

மல்டி ஸ்டோரீஸ் பார்க்கிங் சந்தா மாதம் 735 திர்ஹம்ஸிலிருந்து தொடங்குகிறது.

கூடுதல் மேம்பாட்டு மண்டல தொகுப்புகள்

  • துபாய் ஸ்டுடியோ சிட்டி: 315 திர்ஹம்/மாதம் (869 இடங்கள் அணுக)
  • துபாய் அவுட்சோர்ஸ் சிட்டி: 315 திர்ஹம்/மாதம் (141 இடங்கள்)
  • துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி: 300 திர்ஹம்/மாதம் (875 இடங்கள்)
    துபாய் இன்டர்நேஷனல் அகாடெமிக் சிட்டி: 315 திர்ஹம்/மாதம் (1,850 இடங்கள்)
    துபாய் புரொடக்சன் சிட்டி: 315 திர்ஹம்/மாதம் (5,650 இடங்கள்)
    துபாய் சயின்ஸ் பார்க்: 315 திர்ஹம்/மாதம் (777 இடங்கள், மண்டலம் 672F)

பார்கின் நிறுவனத்தின் கூற்றுப்படி, புதிய விரிவாக்கப்பட்ட அமைப்பு பார்க்கிங் வசதியை எளிதாக்குவதையும், தினசரி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு தீர்வுகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது தெரிகிறது. எனவே, பயனர்கள் தங்கள் இருப்பிடம் மற்றும் பயன்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ற சந்தாவைத் தேர்ந்தெடுக்க பார்கின் அப்ளிகேஷனை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel