துபாயிலிருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் உள்ள ஹஜர் மலைகளில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைப் பகுதியான ஹத்தா சுற்றுலாவாசிகளுக்கும் அமீரக குடியிருப்பாளர்களுக்கும் பிடித்த இடங்களில் ஒன்றாகும். இதில் சமீப காலமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது மேலும் சில திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குளிர்ந்த காலநிலை, இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் வெளிப்புற சாகச நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற ஹத்தாவில் இப்போது அறிமுகமாகும் விரிவாக்கப்பட்ட பண்ணைகள், புதிய ஹைட்ரோபோனிக் பசுமை இல்லங்கள் மற்றும் புதிய பொது வசதிகள் மலைப்பகுதியை அமீரகக் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்னும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றுகின்றன என கூறப்பட்டுள்ளது.
துபாயின் மலைப்பகுதிகளுக்கான பரந்த மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் இந்த மேம்படுத்தல்கள், வளர்ந்து வரும் சமூகத்தின் தேவைகளை ஆதரிப்பது மட்டுமில்லாமல் புதிய பார்வையாளர் அனுபவங்களையும் அறிமுகப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கப்பட்ட பண்ணைகள்
ஹத்தாவின் விவசாய தளங்கள் முழுவதும் வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட திட்டங்கள் அதிக உற்பத்தி மற்றும் சிறந்த தரமான பயிர்களை உறுதியளிக்கின்றன.
ஸ்ட்ராபெரி பண்ணை
- வெளிப்புற சாகுபடி பகுதிகள் விரிவாக்கப்பட்டுள்ளன
- செங்குத்து விவசாயம் மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் மூலம் பசுமை இல்லம் புதுப்பிக்கப்பட்டுள்ளது
- புதிய அமைப்புகளுடன் குளிரூட்டும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது
இலை பசுமை பண்ணை
மூன்று புதிய ஹைட்ரோபோனிக் பசுமை இல்லங்கள் நிறைவடைந்துள்ளன. இதில் வாடிக்கையாளர்கள் புதிய விளைபொருட்களை வாங்க நேரடி விற்பனை நிலையம் இப்போது திறக்கப்பட்டுள்ளது
ஹத்தா பண்ணை
புதிய ஹைட்ரோபோனிக் பசுமை இல்லங்கள் நிறுவப்பட்டுள்ளன. அத்துடன் செயல்திறன் மற்றும் பயிர் தரத்தை அதிகரிக்க ஸ்மார்ட் பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய ஆம்பிதியேட்டர்
இந்த மேம்படுத்தல்களின் முக்கிய சிறப்பம்சம் புதிதாக முடிக்கப்பட்ட 610 மீட்டர் ஹத்தா டேம் ஆம்பிதியேட்டர் ஆகும், இது பார்வையாளர்களுக்கு அணையின் உச்சியை அடைய அணுகக்கூடிய நடைபாதையை வழங்குகிறது. ஆறு ஓய்வு பகுதிகளுடன் 37 மீட்டர் உயரமுள்ள 17 நிமிட பாதையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கும் ஏற்ற வகையில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இடைநிறுத்தப்பட்ட-கட்டமைப்பு முறைகளைப் (suspended-structure technique) பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த ஆம்பிதியேட்டர் இயற்கை நிலப்பரப்பைப் பாதுகாக்கிறது மற்றும் ஹத்தாவின் நகர்ப்புற வடிவமைப்பு வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போகிறது. இந்தப் பாதை மொபிலிட்டி சென்டர் மற்றும் ஹத்தா நீர்வீழ்ச்சித் திட்டத்துடன் (Hatta Waterfall Projects) நேரடியாக இணைகிறது, நீர்வீழ்ச்சிகளுக்குக் கீழே உள்ள நீர் கால்வாயின் (water canal) இருபுறமும் விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் வரிசையாக உள்ளன.
மேலும், அணையின் சரிவில் மறைந்த ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் ஆகியோரின் உருவம் மொசைக் சுவரோவியமாகவும் மாற்றப்பட்டுள்ளது, இது 1.2 மில்லியனுக்கும் அதிகமான இயற்கை பளிங்குத் துண்டுகளால் ஆனது மற்றும் உலகின் மிகப்பெரியதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புதிய பள்ளி
கூடுதலாக, 18,600 சதுர மீட்டர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய பள்ளி திறக்கப்பட்டுள்ளது, இதில் 1,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இவை தவிர, ஹத்தா 1, ஹத்தா 2, ரஷீத் பின் சயீத் மற்றும் அல் தஹ்ரா ஆகிய நான்கு பள்ளிகளிலும் பராமரிப்பு மற்றும் மேம்பாடுகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மஜ்லிஸ், திருமண மண்டபம் மற்றும் சமூக மையம்
அதுமட்டுமின்றி, 130 பேரை வரவேற்கும் மற்றும் ஒரு முக்கிய சமூக மையமாக செயல்படும் ஹத்தா மஜ்லிஸில் பணிகள் நடந்து வருகின்றன. இது ஒரு பல்நோக்கு மண்டபம், நிர்வாக அலுவலகங்கள் மற்றும் சேவை வசதிகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மக்கான் மாவட்டத்தில் ஹத்தா சமூக சேவை மையத்துடன் சேர்ந்து 1,000 விருந்தினர்களுக்கான திறன் கொண்ட ஒரு புதிய திருமண மண்டபமும் உருவாக்கத்தில் உள்ளது, இந்த மையம் 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது மற்றும் 13 வணிக அலகுகளை உள்ளடக்கியது.
உள்கட்டமைப்பு திட்டங்கள்
மேற்கண்டவை தவிர கூடுதல் மேம்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை
- சைக்கிள் ஓட்டுதல் பாதைகளின் விரிவாக்கம்
- ஹத்தா மருத்துவமனையின் மேம்பாடு
- ஹத்தா ஸ்போர்ட்ஸ் க்ளப்பின் மேம்பாடு
- அணை பராமரிப்பு பணிகள்
- 15-கிமீ மலை பைக்கிங் பாதை
- 10-கிமீ மலையேற்றப் பாதை
இந்தத் திட்டங்கள் ஒன்றாக, வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் வாழ்க்கை முறை இடமாக ஹத்தாவின் நிலையை வலுப்படுத்துவதுடன், மேம்பட்ட சமூக சேவைகள் மற்றும் நவீன உள்கட்டமைப்புடன் இயற்கை அழகை ஒன்றிணைப்பதாக கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel