புத்தாண்டு தினம் நெருங்கி வரும் நிலையில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சிறப்பு புத்தாண்டு கடல்வழிச் சேவைகளை அறிவித்துள்ளது. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் துபாயின் பிரபலமான வானவேடிக்கைகளை தண்ணீரில் இருந்து பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த அறிவிப்பின் படி, துபாய் ஃபெர்ரி, வாட்டர் டாக்ஸி மற்றும் பாரம்பரிய ஆப்ரா உள்ளிட்ட நீர்வழி சேவைகள் டிசம்பர் 31, 2025 அன்று செயல்படும்.
புர்ஜ் கலீஃபா, புர்ஜ் அல் அரப், அட்லாண்டிஸ் தி பாம், ப்ளூவாட்டர்ஸ் ஐலேண்ட் மற்றும் JBR உள்ளிட்ட முக்கிய கொண்டாட்ட இடங்களிலிருந்து வானவேடிக்கைகளின் கண்கவர் காட்சிகளைப் பயணிகள் பெறுவார்கள். இந்த காட்சிகளின் ஒளி நீர்ப்பரப்பில் ஒளிரும் போது பயணிகள் ஒரு மறக்க முடியாத சிறந்த அனுபவத்தைப் பெறலாம்.
கடல் போக்குவரத்து நெட்வொர்க்கின் மூன்று சேவைகளும் புத்தாண்டு அன்று இரவு 10 மணி முதல் இரவு 10:30 மணி வரை தொடங்கும், அனைத்து பயணங்களும் நள்ளிரவு 1:30 மணிக்கு முடிவடையும் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது. அனைத்து கடல் போக்குவரத்து சேவைகளையும் எவ்வாறு அணுகுவது, டிக்கெட் விலைகள் உள்ளிட்ட முழுவிபரம் அடங்கிய வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
துபாய் ஃபெர்ரி
புறப்படும் இடங்கள்:
- மெரினா மால் மரைன் டிரான்ஸ்போர்ட் நிலையம் (துபாய் மெரினா)
- அல் குபைபா மரைன் டிரான்ஸ்போர்ட் நிலையம்
- புளூவாட்டர்ஸ் மரைன் டிரான்ஸ்போர்ட் நிலையம்
டிக்கெட் விலைகள்:
- சில்வர்: 350 திர்ஹம்
- கோல்டு: 525 திர்ஹம்
- குழந்தைகள் (2–10 வயது): 50% தள்ளுபடி
- 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: இலவசம்
வாட்டர் டாக்ஸி
புறப்படும் இடம்:
மெரினா மால் மரைன் டிரான்ஸ்போர்ட் நிலையம்
விலை: 20 பயணிகளுக்கு முழுவதுமாக முன்பதிவு செய்ய கட்டணம் 3,750 திர்ஹம்ஸ்.
அப்ரா
புறப்படும் இடங்கள்:
- அல் ஜதாஃப்
- அல் ஃபஹிதி
- அல் குபைபா
- மெரினா மால் மரைன் டிரான்ஸ்போர்ட் நிலையம்
டிக்கெட் விலை:
- ஒருவருக்கு 150 திர்ஹம்
- 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: இலவசம்
முன்பதிவு செய்வது எப்படி?
வாட்டர் டாக்ஸி, துபாய் ஃபெர்ரி மற்றும் ஆப்ரா பயணங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு 8009090 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது marinebooking@rta.ae என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel