ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளை அறிவித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட எரிபொருள் விலைப் பட்டியலின் படி, வாகன ஓட்டிகள் டிசம்பர் மாதத்தில் பெட்ரோலுக்கு சற்று அதிகமாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆம், நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது வாகன வகையைப் பொறுத்து முழு டேங்கை நிரப்புவதற்கு 3.67 திர்ஹம் முதல் 5.18 திர்ஹம் வரை அதிகரிக்கும்.
டிசம்பரின் அதிகரிப்பு குளிர்காலத்தில் அதிக கச்சா எண்ணெய் தேவையையும் சில சர்வதேச சந்தைகளில் கட்டுப்பாடான விநியோகத்தையும் பிரதிபலிக்கிறது என்று தொழில்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
டிசம்பர் 2025க்கான புதிய எரிபொருள் விலைகள்
- சூப்பர் 98: 2.70 திர்ஹம் (நவம்பரில் 2.63 திர்ஹம்ஸ்)
- ஸ்பெஷல் 95: 2.58 திர்ஹம் (நவம்பரில் 2.51 திர்ஹம்ஸ்)
- இ-பிளஸ் 91: 2.51 திர்ஹம் (நவம்பரில் 2.44 திர்ஹம்ஸ்)
உலகளாவிய சந்தை போக்குகளைப் பிரதிபலிக்கும் வகையில் எரிபொருள் விலைக் குழு புதுப்பிக்கப்பட்ட விலைகளை வெளியிட்டது. இந்த அதிகரிப்பு மிதமானது என்றாலும், தினசரி பயணிகள் மற்றும் நீண்ட தூர ஓட்டுநர்களுக்கு அவர்களின் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel