ADVERTISEMENT

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு…கோர்ஃபக்கானில் தற்காலிக சாலை மூடல் அறிவிப்பு!!

Published: 4 Dec 2025, 6:57 PM |
Updated: 4 Dec 2025, 6:57 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் உள்ள கோர்ஃபக்கன் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக தற்காலிக சாலை மூடலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அபு உபைதா அல்-ஜர்ரா ஸ்ட்ரீட் திங்கள், டிசம்பர் 8 முதல் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12 வரை மூடப்படும் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த காலகட்டத்தில் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

எமிரேட் முழுவதும் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு முக்கிய சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஷார்ஜா ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

புதிய திட்டங்களில் ஒன்று எதிஹாட் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஷார்ஜா ரிங் ரோட்டின் 5 கிமீ பகுதியை மேம்படுத்துவதும் அடங்கும். சுமார், 90 மில்லியன் திர்ஹம் பட்ஜெட்டில், இந்த திட்டம் பரபரப்பான மிலீஹா சாலையில் நெரிசலைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது .

ADVERTISEMENT

இந்த மேம்படுத்தலின் ஒரு பகுதியாக, யுனிவர்சிட்டி சிட்டி பிரிட்ஜ் ஒவ்வொரு திசையிலும் இரண்டு என நான்கு பாதைகளாக அகலப்படுத்தப்படும், இது ரக்கான் பாலத்தை (Rakan Bridge) நோக்கிய இணைப்பு மற்றும் போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 60 மில்லியன் திர்ஹம் செலவில் மேற்கொள்ளப்படும் இரண்டாவது திட்டம் ‘Martyrs’ Monument’க்கு அருகில் ஒரு புதிய பாலத்தைக் கட்டுவதை உள்ளடக்கியது.

மிலீஹா சாலையிலிருந்து முகமது பின் சையத் சாலை வரை, மற்றும் ஷேக் கலீஃபா ஸ்ட்ரீட்டிலிருந்து மலிஹா சாலை வரை பயணிக்கும் வாகனங்களுக்கு இந்தப் பாலம் நேரடி வழியை வழங்கும் என கூறப்படுகின்றது. இந்த புதிய உள்கட்டமைப்பு தற்போதுள்ள சாலைகளில் அழுத்தத்தைக் குறைத்து, அப்பகுதியில் ஒட்டுமொத்த போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel