அமீரகக் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்படும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) 31வது சீசன் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரம்மாண்டமாகத் தொடங்கியது, ஜனவரி 11, 2026 வரை 38 நாட்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்வு நகரம் முழுவதும் ஷாப்பிங், பொழுதுபோக்கு அனுபவங்களுடன் தொடங்கியது. இந்தாண்டு இசை நிகழ்ச்சிகள், குடும்ப இடங்கள், கண்கவர் நிகழ்ச்சிகள் மற்றும் மிகப்பெரிய ஷாப்பிங் சலுகைகளுடன் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சேரிகள், குடும்ப நிகழ்ச்சிகள், வானவேடிக்கைகள் மற்றும் அற்புதமான காட்சிகள் நிறைந்த துடிப்பான அனுபவங்களுடன் இம்மாதத்தின் முதல் வாரயிறுதியில் கோலாகலமாகத் தொடங்கியதால் முதல் நாளே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து துபாய் ஃபெஸ்டிவல்ஸ் மற்றும் ரீடெயில் எஸ்டாப்ளிஷ்மென்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது அல் காஜா அவர்கள் பேசுகையில், இந்த ஆண்டு DSF துபாயின் லட்சியத்தையும் ஆற்றலையும் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த விழா பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சியை தொடர்ந்து ஆதரிப்பதாகவும், பார்வையிடவும் வாழவும் உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாக நகரத்தின் நிலையை வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (டிசம்பர் 6, 2025) பாலிவுட் நட்சத்திரம் நோரா ஃபதேஹி துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் உள்ள ஃபெஸ்டிவல் பேயில் e&DSF இரவுகளில் நேரடி நிகழ்ச்சி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரவு 8:30 மணி வானவேடிக்கை நிகழ்ச்சி, குடும்பத்திற்கு ஏற்ற பொழுதுபோக்கு மண்டலங்கள், நிறுவல்கள் ஆகியவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டின்னர் இன் தி ஸ்கை
ஹத்தாவில் அறிமுகமாகியுள்ள இந்த அனுபவம், 50 மீட்டர் உயரத்தில் இருந்து உணவருந்தும் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு நபருக்கு 300 திர்ஹம் என்ற விலையில் உணவை வழங்கப்படுகிறது.
ராக்ஸி டோம் சினிமா (Roxy Dome Cinema)
குடும்பங்கள் டோம் வடிவத்தில் உள்ள திரையரங்கிற்குள் நட்சத்திரங்களின் கீழ் வெளிப்புற திரைப்படக் காட்சிகளை அனுபவிக்கலாம்.
புதிய ட்ரோன் மற்றும் பைரோ ஷோ
இந்த ஆண்டின் ஒரு முக்கிய சிறப்பம்சம் புதிய DSF ட்ரோன் மற்றும் பைரோ ஷோ ஆகும், இதில் 1,000 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இடம்பெற்று சிறப்பான காட்சிகளை தரும். இதில் 100 பைரோ ட்ரோன்கள் அடங்கும்.
இரவு நேர நிகழ்ச்சி துபாய் வானலையை ஒருங்கிணைந்த விளக்குகள், இசை மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இயற்றிய சிறப்பு ஒலிப்பதிவு மூலம் ஒளிரச் செய்யும்.
பெரிய இசை நிகழ்ச்சிகள் மற்றும் பெரிய பரிசுகள்
e& DSF இரவுகளுக்கான டிக்கெட்டுகள் PlatinumList.net இல் கிடைக்கின்றன, விலைகள் 50 திர்ஹம்ஸ் விலையில் தொடங்குகின்றன. இரண்டு கூடுதல் முக்கிய இசை நிகழ்ச்சிகள், ஒன்று கோகோ கோலா அரங்கிலும் மற்றொன்று DSF நைட்ஸ் அரங்கிலும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DSF மெகா ரேஃபிளிலும் ஷாப்பிங் செய்பவர்கள் பங்கேற்கலாம், இதன் மூலம் புத்தம் புதிய நிசான் மற்றும் தினமும் 100,000 திர்ஹம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இறுதியாக, இந்த விழா 400,000 திர்ஹம்ஸ் என்ற கிராண்ட் பரிசுடன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel