ADVERTISEMENT

UAE: ஓட்டுநர் உரிமத்தை ஐந்தே நிமிடங்களில் பெறலாம்..!! புதிய ஸ்மார்ட் வசதியை அறிவித்த எமிரேட்..!!

Published: 11 Dec 2025, 4:56 PM |
Updated: 11 Dec 2025, 4:56 PM |
Posted By: Menaka

அனைத்து துறைகளிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை புகுத்தி வரும் அமீரகம் தற்பொழுது மேலும் ஒரு புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அமீரகத்தின் ராஸ் அல் கைமா எமிரேட்டில் இந்த திட்டம் வந்துள்ளது. ராஸ் அல் கைமா காவல்துறை, அதன் ஸ்மார்ட் பொதுச் சேவைகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அறிவித்துள்ளது. அந்த எமிரேட்டின் ‘Smart Testing Village’ எனப்படும் வசதியானது, ஓட்டுநர் தேர்வு நேரத்தை ஆட்டோமேட்டிக் வாகனங்களுக்கு 80% வரையிலும், மேனுவல் வாகனங்களுக்கு 70% வரையிலும் குறைத்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், இந்த மேம்பட்ட வசதி, விண்ணப்பதாரர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை வெறும் ஐந்து நிமிடங்களில் பெறுவதற்கான VIP சேவையையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்திலேயே ஒரு சாதனை எனவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ராஸ் அல் கைமா காவல்துறையின் மத்திய செயல்பாடுகளின் பொது இயக்குநர் பிரிகேடியர் அகமது அல் சும் அல் நக்வி கூறுகையில், இந்தச் சாதனை, புதுமை மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்திய சேவையின் மீதான காவல்துறையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மேம்பட்ட ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் மூலம் செயல்முறைகளை எளிதாக்குவதற்கும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் உள்துறை அமைச்சகத்தின் உத்தியுடன் இந்த முயற்சி ஒத்துப்போகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

அதிகாரியின் கூற்றுப்படி, ஸ்மார்ட் டெஸ்டிங் வில்லேஜ், எந்தவொரு மனிதத் தலையீடும் இல்லாமல் ஓட்டுநர் தேர்வுகளை நடத்த அனுமதிக்கும் உயர் தொழில்நுட்ப அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் மேம்பட்ட AI கருவிகள் மற்றும் ஓட்டுநர் செயல்திறனைத் துல்லியமாக மதிப்பிடக்கூடிய நவீன சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேர்வின் போது, ​​ஒரு நிபுணர் மத்திய கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அறையிலிருந்து இந்த செயல்முறையை தொலைவிலிருந்து கண்காணித்து, துல்லியம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வார் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. மதிப்பீடு முடிந்ததும், கணினி தானாகவே விண்ணப்பதாரருக்கு அவர்களின் தேர்வு முடிவுகளுடன் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel