புத்தாண்டு துவங்கவுள்ள நிலையில், பல குடியிருப்பாளர்களும் சுற்றுலாவாசிகளும், புகழ்பெற்ற புர்ஜ் கலிஃபா வாணவேடிக்கைகளுடன் 2026-ஐ வரவேற்க வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால், டவுன்டவுன் துபாயில் உள்ள உணவக மேசைகள் மற்றும் கட்டணத்துடன் கூடிய இடங்களுக்கான விலைகள் ஆயிரக்கணக்கான திர்ஹம்களில் இருப்பதால், வாணவேடிக்கைகளைப் பார்ப்பதற்காக மட்டும் 2,000 திர்ஹாம் அல்லது 20,000 திர்ஹாம் செலவிடுவது அனைவருக்கும் சாத்தியமானதற்றதாக உள்ளது.
அதே நேரத்தில், நீங்கள் அவ்வளவு பணம் செலவழிக்கத் தேவையில்லை. துபாய், ஒரு திர்ஹம் கூட செலவில்லாமல், தெளிவான காட்சிகளையும், நேரலை LED ஸ்கிரீன்களையும், ஒரு பண்டிகை காலச் சூழலையும் வழங்கும் அதிகாரப்பூர்வமான இலவச பொதுப் பார்வை இடங்களை அமைத்துள்ளது. எனவே, சரியான திட்டமிடல் மற்றும் முன்கூட்டியே செல்வதன் மூலம், உலகின் மிக உயரமான கட்டிடத்தின் பிரம்மாண்டமான புத்தாண்டு வானவேடிக்கை காட்சிகளை முற்றிலும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை எங்கு பார்ப்பது, அங்கு எப்படிச் செல்வது, மற்றும் சாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்த முழுமையான வழிகாட்டி இங்கே உள்ளது.
டவுன்டவுன் துபாயில் உள்ள இலவச பொதுப் பார்வை இடங்கள்
எமார் நிறுவனம் டவுன்டவுன் துபாய் முழுவதும் பல இலவச பொதுப் பார்வை மண்டலங்களை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, நேரலை வானவேடிக்கைகள், ஒளி நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வர்டில் உள்ள LED திரைகளிலும் ஒளிபரப்பப்படும்.
மேலும், அனைத்து இலவச மண்டலங்களுக்கும் அனுமதி முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் நுழைவாயில்கள் மூலம் கட்டுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பியவுடன், வாயில்கள் மூடப்படும்.
இலவச பொதுப் பார்வை வாயில்கள்
- பவுல்வர்டு ஹைட்ஸ் (Boulevard Heights)
- புர்ஜ் விஸ்டா
- எமார் ஸ்கொயர்
- முன்னாள் அட்ரஸ் பவுல்வர்டு (Former Address Boulevard)
- ஃபவுண்டைன் வியூஸ்
- அட்ரஸ் டவுன்டவுன்
- விடா துபாய் மால் (Vida Dubai Mall)
குடும்பங்களுக்கான பார்வை இடங்கள் (இலவசம்)
- சவுத் ரிட்ஜ்
- ACT ஒன் / ACT டூ (ACT 1 / ACT 2)
- அவுட்டர் பவுல்வர்டு
- ஓல்ட் டவுன்
- கேஸ்கேட் கார்டன் (Cascade Garden)
தனி நபர்களுக்கான பார்வை இடங்கள் (இலவசம்)
- ஜபீல் பேச்சிலர்
- வியூஸ் பேச்சிலர்
- விடா பேச்சிலர் (Vida Bachelor)
- விஸ்டா பேச்சிலர்
- ரோவ் பேச்சிலர்
இந்த இடங்கள் விரைவாக நிரம்பிவிடும் என்பதால், அனுமதி பெறுவதற்கு முன்கூட்டியே வருமாறு பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான சாலை மூடல்கள் மற்றும் போக்குவரத்துத் திட்டம்
புர்ஜ் கலிஃபா புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளத் திட்டமிடும் வாகன ஓட்டிகள், பல முக்கிய சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படவிருப்பதால், டிசம்பர் 31 அன்று மாலை 4 மணிக்குள் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாலை 4 மணி முதல் சாலை மூடல்கள்
- அல் இஸ்திக்லால் ஸ்ட்ரீட்
- அல் முஸ்தக்பல் ஸ்ட்ரீட்
- லோயர் ஃபைனான்சியல் சென்டர் சாலை
- ஷேக் முகமது பின் ரஷீத் பவுல்வர்டு
- புர்ஜ் கலிஃபா ஸ்ட்ரீட்
கூடுதல் மூடல்கள்
- இரவு 8 மணி முதல்: அல் முல்தகா (அல் முலூக்) ஸ்ட்ரீட்
- இரவு 9 மணி முதல்: அப்பர் ஃபைனான்சியல் சென்டர் சாலை
- இரவு 11 மணி முதல்: ஷேக் சையத் சாலை (பகுதி நேர மூடல்)
ஷேக் சையத் சாலையின் முழுமையான மூடல்
- டிசம்பர் 31 அன்று இரவு 11 மணி முதல் ஜனவரி 2, 2026 அன்று அதிகாலை 2 மணி வரை
ஆகவே, வாகன ஓட்டிகள் தாமதங்களைத் தவிர்க்க, மாற்று வழிகளை முன்கூட்டியே திட்டமிடுமாறும் முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேற்கூறியவாறு பல இலவசப் பார்வை மண்டலங்கள், பெரிய LED ஸ்க்ரீன்கள் மற்றும் விரிவான போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகள் ஆகியவை இருப்பதால், குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் முன்கூட்டியே திட்டமிட்டு, சீக்கிரமாக வந்தால், அதிக செலவின்றி துபாயின் புகழ்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுபவிக்க முடியும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel