ஐக்கிய அரபு அமீரகம் ஒவ்வொரு புத்தாண்டையும் பிரமாண்டமான வானவேடிக்கைகள், ட்ரோன் நிகழ்ச்சிகள் மற்றும் பொது கொண்டாட்டங்கள் மூலம் வரவேற்கிறது. மின்னும் நகர வானலைகள் முதல் கடற்கரைகள் மற்றும் பாலைவன நிலப்பரப்புகள் வரை, குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவில் நாடு ஒளிர்வதைக் காண ஆவலுடன் கூடுகிறார்கள்.
தற்போது புத்தாண்டு கவுண்ட்டவுனுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே வாணவேடிக்கை காட்சியை எங்கு பார்க்கலாம் என்று திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏழு எமிரேட்களிலும் உள்ள முக்கிய வானவேடிக்கை இடங்களின் பட்டியலுடன் கண்கவர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க எங்கு செல்ல வேண்டும், எப்போது வர வேண்டும் மற்றும் கொண்டாட்டங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் தீர்மானிக்க உதவும் வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
துபாய்
முக்கிய இடங்கள்
- புர்ஜ் கலீஃபா & டவுன்டவுன் துபாய்
- பாம் ஜுமேரா (அட்லாண்டிஸ் தி பாம்)
- துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி
- புளூவாட்டர்ஸ் ஐலேண்ட் & JBR
- குளோபல் வில்லேஜ்
நேரம்: நள்ளிரவு 12 மணி
மேற்கண்ட இடங்களையும் சேர்த்து மொத்தம் 40 இடங்களில் புத்தாண்டு வாணவேடிக்கைகளை துபாய் நிகழ்த்தவுள்ளது.
அபுதாபி
முக்கிய இடங்கள்
- ஷேக் சையத் ஃபெஸ்டிவல், அல் வத்பா
- யாஸ் ஐலாண்ட்
- அபுதாபி கார்னிச்
நேரம்: நள்ளிரவு (காலை 12 மணி)
ஷார்ஜா
முக்கிய இடங்கள்
- அல் மஜாஸ் வாட்டர் ஃபிரன்ட்
- அல் கான் வாட்டர் ஃபிரன்ட்
- ஷார்ஜா கார்னிச்
நேரம்: நள்ளிரவு 12 மணி
அஜ்மான்
முக்கிய இடங்கள்
- அஜ்மான் கார்னிச்
- அல் சோரா பீச்
நேரம்: நள்ளிரவு 12 மணி
ராஸ் அல் கைமா
முக்கிய இடங்கள்
- அல் மர்ஜன் ஐலேண்ட்
- அல் ஹம்ரா வாட்டர் ஃபிரன்ட்
நேரம்: நள்ளிரவு
ஃபுஜைரா
முக்கிய இடங்கள்
- ஃபுஜைரா கார்னிச்
- அம்ப்ரெல்லா பீச்
நேரம்: நள்ளிரவு
உம் அல் குவைன்
முக்கிய இடங்கள்
- உம் அல் குவைன் கார்னிச்
- மாங்குரோவ் பீச் பகுதி
நேரம்: நள்ளிரவு
பயணம் மற்றும் பாதுகாப்பு ஆலோசனை
UAE முழுவதும் உள்ள அதிகாரிகள் பொதுமக்களுக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்
- பிரபலமான இடங்களில் சீக்கிரமாக வந்து சேரவும்
- கிடைக்கும் இடங்களில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தவும்
- பாதுகாப்பு மற்றும் கூட்ட மேலாண்மை வழிமுறைகளைப் பின்பற்றவும்
- சாலை மூடல்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கண்காணிக்கவும்
ஏழு எமிரேட்களிலும் கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்குவதால், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் 2026 புத்தாண்டை சிறப்பாக கொண்டாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel