ADVERTISEMENT

UAE: பிக் டிக்கெட்டில் 20 மில்லியன் திர்ஹம் ஜாக்பாட் பரிசை வென்ற இந்தியர்!!

Published: 4 Feb 2026, 11:07 AM |
Updated: 4 Feb 2026, 11:07 AM |
Posted By: Menaka

புதிய மாதம் தொடங்கி மூன்று நாட்களே ஆன நிலையில், பிக் டிக்கெட் தனது சமீபத்திய கிராண்ட் பரிசு வெற்றியாளரை அறிவித்துள்ளது. ஓமானில் வசிக்கும் இந்தியரான ஷாந்தனு ஷெட்டிகர் (Shanthanu Shettigar), இந்த ஆண்டின் இரண்டாவது பிக் டிக்கெட் டிராவில் 20 மில்லியன் திர்ஹம் பரிசை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

மஸ்கட்டில் வர்த்தகத் துறையில் பணிபுரியும் ஷாந்தனு, வெற்றி பெற்ற டிக்கெட்டை (எண் 305810) ஜனவரி 20 அன்று ஒரு நண்பருடன் சேர்ந்து வாங்கியதாகவும், பரிசுத் தொகை சமமாகப் பிரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

2021 முதல் பிக் டிக்கெட் டிராக்களில் பங்கேற்று வரும் அவருக்கு இந்த வெற்றி குறித்த செய்தியைத் தெரிவிக்க அமைப்பாளர்கள் அவரை நேரலையில் அழைத்தபோது, “அட கடவுளே, உண்மையாவா? நன்றி!” என்று திகைத்துப்போய் பேசியுள்ளார்.

ADVERTISEMENT

கர்நாடகாவைச் சேர்ந்த 33 வயதான ஷாந்தனு, எட்டு ஆண்டுகளாக ஓமானில் வசித்து வருகிறார். இந்த வெற்றி தனக்கு ஒரு முழுமையான ஆச்சரியமாக அமைந்தது என்றும் அவர் மகிழ்ச்சியான தருணத்தை நினைவு கூர்ந்தார்.

இது குறித்து அவர் விவரிக்கையில், “எனக்கு நிறைய ஸ்பேம் அழைப்புகள் வரும், நான் வேலையில் மும்முரமாக இருந்தேன். நேரலை டிரா நடக்கிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் பெயர் அறிவிக்கப்படும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்யவில்லை. அது உண்மை என்று நான் உணர்ந்தபோது, ​​​​உண்மையாகவே எனக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. அது இன்னும் எனக்கு முழுமையாக நம்ப முடியாததாகவே இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தனது திட்டங்களைப் பற்றிப் பேசிய ஷாந்தனு, பரிசுத் தொகையில் தனது பங்கை என்ன செய்வது என்று முடிவு செய்ய நேரம் எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். மேலும், “இந்த வெற்றி எதிர்பாராதது. எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நான் கவனமாக சிந்திப்பேன். மற்றவர்களும் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று நான் ஊக்குவிக்கிறேன், உங்கள் நேரம் எப்போது வரும் என்று யாருக்குத் தெரியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நேரலை டிராவில் 20 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசோடு, தலா 1 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள ஐந்து ஆறுதல் பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. வெற்றியாளர்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

  • ஜென்சி ரூபா (இந்தியா, இந்தியாவில் வசிக்கிறார்)
  • தேசன் குன்ஷு (இந்தியா, இந்தியாவில் வசிக்கிறார்)
  • சந்தோஷ் குமார் (இந்தியா, அபுதாபியில் வசிக்கிறார்)
  • துலன் மயூர (இலங்கை, துபாயில் வசிக்கிறார்)
  • முகமது அபு சையத் (பங்களாதேஷ், அல் அய்னில் வசிக்கிறார்)

ஷார்ஜாவைச் சேர்ந்தவருக்கு BMW X5 கார் பரிசு

ஷார்ஜாவில் வசிக்கும் ஒரு பங்களாதேஷ் வெளிநாட்டவரும் ஒரு சொகுசுப் பரிசை வென்றுள்ளார். 32 வயதான ஓட்டுநரான ஷாஹின் மியா, ஜனவரி 11 அன்று வாங்கிய 002887 என்ற டிக்கெட் எண்ணைக் கொண்டு ஒரு BMW X5 காரை வென்றுள்ளார்.

பிக் வின் பரிசுகள்

இதேபோல், பிக் வின் போட்டியில் பல பங்கேற்பாளர்கள் 150,000 திர்ஹம்ஸ் வரையிலான ரொக்கப் பரிசுகளை வென்றுள்ளனர்.

  • 150,000 திர்ஹம்ஸ் பரிசு வென்ற கௌஷிக் உதேஷி (இந்தியா, ஓமன்) என்ற வெற்றியாளர், வியட்நாமிற்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
  • முகமது தௌயிதுல் (பங்களாதேஷ்) ஒரு நண்பரின் உதவியுடன் 150,000 திர்ஹம்ஸ் வென்றார்.
  • ஷௌகத் இஸ்லாம் (பங்களாதேஷ்) 90,000 திர்ஹம்ஸ் வென்றார்.
  • டயானா பிரின்சி (இந்தியா) 150,000 திர்ஹம்ஸ் பரிசை வென்றுள்ளார், மேலும் தனது மகனுடன் ஒரு பயணத்திற்குத் திட்டமிட்டுள்ளார்.

அடுத்த பிக் டிக்கெட் டிரா எப்போது?

பிக் டிக்கெட் அபுதாபி, பிப்ரவரி மாதத்திற்கான 15 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட் பரிசை அறிவித்துள்ளது. இது மார்ச் 3 அன்று நடைபெறும் நேரலை டிராவின் போது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, 100,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள ஐந்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். மாதம் முழுவதும், நான்கு வாராந்திர இ-டிராக்களும் நடத்தப்படும், இதில் ஒவ்வொரு வாரமும் நான்கு வெற்றியாளர்களுக்கு தலா 50,000 திர்ஹம்ஸ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel