அமீரகத்தின் மீது தொடர்ந்து ஈரான் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் துபாய் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கேட்ட சப்தங்கள் வெற்றிகரமான வான் பாதுகாப்பு இடைமறிப்பு நடவடிக்கைகளின் விளைவாகும் என்பதை துபாய் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
துபாய் அரசாங்க ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட குழுக்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் தகவலுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை நம்பியிருக்குமாறும் வதந்திகள் பரப்புவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.