ADVERTISEMENT

அபுதாபியில் ட்ரோன் தாக்குதலை இடைமறிக்கும் சம்பவத்தில் 6 பேருக்கு காயம்..

Published: 5 Mar 2026, 2:40 PM |
Updated: 5 Mar 2026, 2:51 PM |
Posted By: admin

US, இஸ்ரேல்-ஈரான் இடையே ஆறாவது நாளாக போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ஈரான் தொடர்ந்து 6வது நாளாக வளைகுடா நாடுகளில் ஏவுகணைகளை ஏவி வருகிறது. அதிலும் மற்ற வளைகுடா நாடுகளை காட்டிலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகளவு தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் அபுதாபியின் முசாஃபா பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய ICAD 2 பகுதியில் இரண்டு இடங்களில் ஈரான் தாக்கிய ஏவுகணைகளின் உடைந்த பாகங்கள் விழுந்ததன் விளைவாக ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில், வான் பாதுகாப்புப் படையினரால் ஒரு ட்ரோன் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட நிகழ்வின் போது உடைந்த பாகங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் மற்றும் நேபாள நாட்டினரிடையே 6 சிறிய மற்றும் மிதமான காயங்களுக்கு வழிவகுத்தது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து “பொதுமக்கள் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறவும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel

ADVERTISEMENT