ஷார்ஜா எமிரேட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று (மார்ச் 17, 2026, செவ்வாய்க்கிழமை) தற்செயலாக தீவிபத்து ஏற்பட்டதாகவும் ஷார்ஜா காவல்துறை மற்றும் குடிமைப் பாதுகாப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாவது தொழில்துறை பகுதி எனும் அந்த இடத்தில், இந்த விபத்தால் பணியாளர்களுக்கோ அல்லது அங்கிருந்தவர்களுக்கோ எந்தக் காயங்களும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும் சிறப்புக் குழுக்கள் அந்த இடத்தை முழுமையாகப் பாதுகாத்து, தீ அருகிலுள்ள பகுதிகளுக்குப் பரவாமல் தடுத்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குளிர்விக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதனை தொடர்ந்து அதிகாரப்பூர்வமான மூலங்களிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெற வேண்டியதன் அவசியத்தை ஷார்ஜா அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதோடு, இதுபோன்ற சம்பவங்கள் குறித்த வதந்திகளை நம்பவோ பரப்பவோ கூடாது என்றும் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.