அமீரக செய்திகள்

UAE : புதிதாக 102 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!! ஒருவர் உயிரிழப்பு..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று புதிதாக 102 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) தெரிவித்துள்ளது. இதன் மூலம், அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 570 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, இரண்டு பேர் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், தற்பொழுது மேலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அரபு நாட்டை சேர்ந்த 47 வயதான பெண்மணி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


மேலும், ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்பொழுது மூன்று பேர் குணமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்பொழுது குணமடைந்தவர்களில் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர். இதனையொட்டி, அமீரகத்தில் இதுவரை 58 பேர் கொரோனா பாதித்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!