கத்தார், அமீரகத்தை தொடர்ந்து சவூதி, பஹ்ரைன் நாடுகளிலும் இந்தியா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்..!! இந்திய தூதரகங்கள் அறிவிப்பு..!!
வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாரில் மேற்கொள்ளப்பட்ட தாய்நாடு செல்ல விரும்பும் இந்தியர்களின் தகவல்களை சேகரிப்பது போலவே சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகங்களும் அந்தந்த நாடுகளில் இருக்கும் இந்தியர்களில் சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பும் நபர்களின் விபரங்களை சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை இரு தூதரகங்களும் வெளியிட்டுள்ளன. இந்தியா செல்ல விரும்பும் நபர்கள் இந்த தூதரகங்கள் வெளியிட்டுள்ள வலைதளத்தில் தங்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவுக்கான விமான சேவை தொடங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் போது, இந்திய தூதரகம் அது குறித்த ஒரு முறையான அறிவிப்பை வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கூறுகையில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் ஒரு நபருக்கான தகவல் மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும் ஒரே குடும்பத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தனித்தனி படிவங்களை நிரப்பி அனுப்ப வேண்டும் என்றும் இந்த தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், படிவத்தை நிரப்பும்படி கேட்டுக்கொள்வது தகவல் சேகரிப்புக்காக மட்டுமே என்றும், இதனால் இந்தியாவிற்கு செல்லும் விமானத்தில் பதிவு செய்யப்படுவதாக அர்த்தம் இல்லை என்றும் தூதரகங்கள் வலியுறுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவில் இருக்கக்கூடிய இந்தியர்கள் தங்களின் விபரங்களை https://forms.gle/PywbFmWc413r3vTg8 என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
The Embassy will make an announcement on the website and its social media accounts as and when a decision is taken by the Government of India in this regard.
— India in SaudiArabia (@IndianEmbRiyadh) April 29, 2020
பஹ்ரைனில் இருக்கக்கூடிய இந்தியர்கள் தங்களின் விபரங்களை https://forms.gle/FCWAxcy2JsUtzY என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
We are collecting data about people requesting repatriation to India. Please follow this link (https://t.co/SyoyCQKznv) and answer the questions. At this stage, the purpose is only to compile information. No decision has been taken with regards to resumption of flights to India.
— India in Bahrain (@IndiaInBahrain) April 29, 2020