அமீரக செய்திகள்

UAE கொரோனா அப்டேட் (ஏப்ரல் 13, 2020) : ..!!! பாதிக்கப்பட்டோர் 398 பேர்..!!! மொத்த எண்ணிக்கை 4,521 பேர்..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (திங்கள்கிழமை, ஏப்ரல் 13,2020) புதிதாக 398 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 4,521 ஆக உயர்ந்துள்ளது.

இன்று முன்னதாக அறிவிக்கப்பட்ட செய்தியில், புதிதாக மூன்று பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்று சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் (MoHAP) சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனாவிற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 172 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 852 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!