துபாய் வரும் பயணிகள் ICA / GDRFA ஒப்புதல் வைத்திருப்பது கட்டாயம்..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தகவல்..!!

இந்தியாவிலிருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் ஐக்கிய அரபு அமீரகம் திரும்பி வருவதற்கு ICA அல்லது GDRFA ஒப்புதல் பெறுவது கட்டாயம் என இருந்த நிலையில், நேற்று முதல் ஐக்கிய அரபு அமீரகம் வர ICA அனுமதி பெறுவது தேவை இல்லை எனவும், அமீரகம் திரும்பும் பயணிகள் தங்களின் பயண ஆவணங்களை உறுதிப்படுத்திக்கொள்ள https://uaeentry.ica.gov.ae என்ற இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளுமாறும் ICA அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து ICA வின் இந்த முடிவு துபாய் ரெசிடென்ட் விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்களுக்கும் பொருந்துமா என பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ICA வின் இந்த அறிவிப்பு துபாய் விமான நிலையத்திற்கு வரும் குடியிருப்பாளர்களுக்கு பொருந்தாது என்றும், மேலும் துபாய் விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் கட்டாயம் GDRFA அனுமதி வைத்திருக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள டீவீட்டில் “ICA / GDRFA ஒப்புதல் இல்லாமல் அமீரகம் திரும்பி வருபவர்களை அனுமதிக்கும் முடிவை துபாய் அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். துபாய்க்கு திரும்பிச் செல்லும் துபாய் குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள் GDRFA விடம் நாடு திரும்புவதற்கான ஒப்புதலை கட்டாயம் பெற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது. இதே போன்று அமீரகத்திற்கு சொந்தமான விமான நிறுவனங்களில் ஒன்றான ஃப்ளை துபாய் (Fly Dubai) நிறுவனமும் ICA / GDRFA ஒப்புதல் இல்லாமல் அமீரகம் திரும்பி வருபவர்களை அனுமதிக்கும் முடிவை துபாய் அதிகாரிகள் ரத்து செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது இந்தியா மற்றும் அமீரகம் இடையே அமலில் இருந்த பல்வேறு பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இவ்விருநாடுகளுக்கும் இடையே ஆகஸ்ட் மாதம் மட்டும் 400 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இயக்கப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Attention Dubai-bound passengers!
Dubai authorities have revoked the decision to allow returning residents without ICA/GDRFA approval.
Dubai residence visa holders who are flying back to Dubai must have return approval from the GDRFA pic.twitter.com/U9PkfgRnH7
— Air India Express (@FlyWithIX) August 13, 2020