வளைகுடா செய்திகள்

குவைத்: டிரைவிங் லைசென்ஸை பெற்றுக்கொள்ள புதிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தானியங்கி இயந்திரங்கள்..!! பொது போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!!

குவைத்தில் இருக்கும் பொது போக்குவரத்து துறையானது வாகன ஓட்டிகள் தங்களின் ஓட்டுநர் உரிமங்களை பெறுவதற்கு தானியங்கி இயந்திரங்களை ஏற்கெனவே சில இடங்களில் அமைத்திருந்த நிலையில், தற்பொழுது கூடுதலாக இரண்டு இடங்களில் தானியங்கி இயந்திரங்களை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்பொழுது புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி இயந்திரங்களானது சூக் ஷார்க் மற்றும் ஜஹ்ராவில் இருக்கும் அல் கைமா மாலில் அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர்த்து தற்பொழுது தி அவென்யூஸ், மரீனா மால் மற்றும் அல்கூத் மாலில் அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி இயந்திரங்களிலும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் டிரைவிங் லைசென்ஸை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உள்துறை அமைச்சகமானது அல் நாசர் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் டிரைவிங் லைசென்ஸை பெற்றுக்கொள்ளும் சேவையை இன்று (ஆகஸ்ட் 23) முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!