ADVERTISEMENT

அமீரகத்தில் திடீரென உயர்ந்த கொரோனா பாதிப்புகள்..!! இன்று மட்டும் 883 பேர் பாதிப்பு..!!

Published: 9 Sep 2020, 10:37 AM |
Updated: 9 Sep 2020, 11:29 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் தினந்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் 200 க்கும் குறைவான அளவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து இன்றைய நாளில் மட்டும் 850 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் அமீரகத்தில் பதிவாகியிருப்பதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக கடந்த மாதம் வரையிலும் 5000 க்கும் குறைவானவர்களே அமீரகத்தில் கொரோனா வைரஸிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தில் இன்று (புதன்கிழமை, செப்டம்பர் 9, 2020) புதிதாக 883 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 75,981 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு இருவர் பலியாகியுள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 393 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 416 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 67,359 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் அமீரக குடியிருப்பாளர் ஒருவரின் அலட்சியத்தால் அவரின் குடும்ப உறவினர்கள் 45 பேருக்கு கொரோனா தொற்று பரவியதும், அதனால் 90 வயதுடைய உறவினர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விரிவான செய்தியை இங்கு க்ளிக் செய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.