ADVERTISEMENT

ஓமான்: அல் வஸ்தா கவர்னரேட்டில் 1,000 மரக்கன்றுகளை நடவு செய்த சுற்றுச்சூழல் ஆணையம்..!!

Published: 14 Oct 2020, 11:11 AM |
Updated: 14 Oct 2020, 11:13 AM |
Posted By: admin

ஓமானில் இருக்கக்கூடிய அல் வஸ்தா (Al Wusta) கவர்னரேட்டின் அல் ஜேசர் (Al Jaser) பகுதியில் சுற்றுச்சூழல் ஆணையம் சுமார் 1,000 சதுப்புநில மரக்கன்றுகளை (Mangrove Seedlings) நடவு செய்துள்ளது.

ADVERTISEMENT

ஓமானில் சதுப்புநில வனப்பகுதிகளை அதிகரிப்பதற்கான ஒரு மெகா திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பின் ஒரு பகுதியாக தற்பொழுது 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

சதுப்பு நிலங்களின் மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான திட்டம் 2001 இல் தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் தற்பொழுது வரை, சுற்றுச்சூழல் ஆணையம் ஏற்கனவே சுமார் 685,000 மரக்கன்றுகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT