ADVERTISEMENT

ஓமான்: சென்னை உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகளை இயக்கும் ஸலாம் ஏர்..!! 

Published: 8 Oct 2020, 2:35 PM |
Updated: 8 Oct 2020, 2:39 PM |
Posted By: admin

இந்தியாவிற்கும் ஓமானிற்கும் இடையே போடப்பட்ட ‘ஏர் பபுள்’ ஒப்பந்தத்தை தொடர்ந்து தற்பொழுது ஓமானிற்கு சொந்தமான விமான நிறுவனமான ஸலாம் ஏர் (Salam Air) இந்தியாவின் 6 முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு விமான சேவைகளை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. சலாம் ஏர் நிறுவனமானது வாரத்தில் இரு முறை சென்னை, கோழிக்கோடு, ஹைதராபாத், ஜெய்ப்பூர், லக்னோ, மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு நவம்பர் இறுதி வரை சிறப்பு விமானங்களை இயக்கும் என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த விமானங்களில் பயணம் செய்வதற்கு ஸலாம் ஏர் நிறுவனத்தின் வலைத்தளத்திலோ (salamair.com) அல்லது பயண முகவர்கள் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சலாம் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேப்டன் முகமது அகமது அவர்கள் கூறுகையில், “இந்தியாவுக்கும் ஓமானுக்கும் இடையிலான இந்த ‘ஏர் பபுள்’ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நாங்களும் பங்காற்றுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஏற்பாடு தற்காலிகமானது என்றாலும், நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், இந்தியாவை எங்கள் இலக்குகளில் ஒன்றாக அறிமுகப்படுத்த எதிர்பார்த்து இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

 

இந்தியாவுடனான “ஏர் பபுள்” ஒப்பந்தத்தில் இணைந்த ஓமான்..!!

ADVERTISEMENT