வளைகுடா செய்திகள்

இந்தியாவுடனான “ஏர் பபுள்” ஒப்பந்தத்தில் இணைந்த ஓமான்..!!

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் இந்திய அரசானது, குறிப்பிட்ட நாடுகளுடன் “ஏர் பபுள் (Air Bubble)” எனும் ஒப்பந்தப்படி இந்தியாவில் இருந்தும் சிறப்பு விமான சேவைகளை இயக்கி வருகிறது. ஏர் பபுள் ஒப்பந்தப்படி, இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு விமான சேவைகளை இரு நாடுகளுக்கும் சொந்தமான விமான நிறுவனங்களின் மூலம் இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது, இந்தியாவிற்கும் ஓமானிற்கும் இடையே ஏர் பபுள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது அக்டோபர் 1, 2020 (இன்று) முதல் நவம்பர் 30, 2020 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த குறிப்பிட்ட காலங்களில் இரு நாடுகளுக்கும் சொந்தமான விமான நிறுவனங்களின் மூலம் இந்தியாவிற்கும் ஓமானிற்கும் இடையே சிறப்பு விமான சேவைகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா ஏற்கெனவே 15 நாடுகளுடன் ஏர் பபுள் ஒப்பந்தப்படி சிறப்பு விமான சேவைகளை இயக்கி வரும் நிலையில் தற்பொழுது ஓமான் நாடானது 16 வது நாடாக இணைந்துள்ளது. மேலும், இந்த விமானங்களில் பயணிப்பதற்கு சில நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஓமானில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுபவர்கள்

  • ஓமானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்
  • OCI அட்டை (OCI cardholders) வைத்திருந்து ஓமான் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள்
  • 30.06.2020 தேதியில் உள்துறை அமைச்சகம் (MHA) வெளியிட்ட வழிகாட்டுதலின் கீழ் இந்திய அரசு வழங்கிய செல்லுபடியாகும் விசாவை வைத்திருக்கும் ஓமானின் குடிமக்கள் (including diplomats)

இந்தியாவில் இருந்து ஓமானிற்கு இயக்கப்படும் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுபவர்கள்

  • ஓமானில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அல்லது ஓமான் குடிமக்கள்
  • ஓமனின் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் பெர்மிட் வைத்திருக்கும் எந்த இந்திய நாட்டவரும் ஓமானுக்கு மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர். இந்திய பயணிகளுக்கு டிக்கெட் / போர்டிங் பாஸ் வழங்குவதற்கு முன்னர் இந்தியர்கள் ஓமானுக்குள் நுழைய தகுதியுள்ளவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த சிறப்பு விமான சேவைகளில், இரு நாடுகளின் விமான அதிகாரிகள் வழங்கிய SOP (Standard Operating Protocols) மற்றும் இரு நாட்டு அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்ட பிற COVID-19 தொடர்பான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

விமானங்களுக்கான டிக்கெட்டுகளை விமான நிறுவனங்களின் வலைத்தளம் மூலமாகவோ அல்லது பயண முகவர்கள் (Travel Agents) மூலமாகவோ அல்லது உலகளாவிய விநியோக அமைப்புகள் மூலமாகவோ விற்பனை செய்து கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!