ADVERTISEMENT

தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய அமீரக தலைவர்கள்..!!

Published: 30 Nov 2020, 11:25 AM |
Updated: 30 Nov 2020, 11:28 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் 30 அன்று தியாகிகள் நினைவு தினமானது ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்பட்டது வருகின்றது. இன்று தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அமீரக தலைவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இது குறித்து வெளியிட்ட செய்தியில், “ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் உறுப்பினர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை பாதுகாக்க தங்களின் உயிரை தியாகம் செய்கிறார்கள். அவர்களுக்கு மரியாதை, நன்றியுணர்வு மற்றும் விசுவாசத்தைக் காட்ட அமீரகமானது வடக்கிலிருந்து தெற்கிலும் கிழக்கிலிருந்து மேற்கிலும் உயர்ந்து நிற்கிறது. மகிமையும் அழியாத புகழும் எங்கள் தியாகிகளுக்கு என்றென்றும் உரித்தாகுக!!” என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதே போல், அபுதாபியின் மகுட இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியும், அபுதாபியின் செயற்குழுத் தலைவருமான மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் ஐக்கிய அரபு அமீரக வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தினார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த நாளில், தங்களின் உயிரை தியாகம் செய்த முன்னணி வீரர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்காக நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். இந்த நாட்டைப் பாதுகாப்பதற்கான முன்னணியில் அவர்கள் இறுதி தியாகத்தை செய்தார்கள். அவை நம் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும். அவர்களின் தியாகம் கடினமான காலங்களில் எங்கள் பாதையை ஒளிரச் செய்யும் கலங்கரை விளக்கமாக உள்ளது. தியாகிகள் தினத்தன்று, அவர்களின் வீரத்திற்கு அஞ்சலி செலுத்துவதிலும், நம் நாட்டையும் நம் மக்களையும் பாதுகாப்பதில் அவர்கள் கொண்ட அக்கறைக்கு வணக்கம் செலுத்துவதிலும் தேசத்தை இணைக்க விரும்புகிறேன்” என்று பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT