ADVERTISEMENT

UAE : குடிமக்கள், குடியிருப்பாளர்களுக்கு PCR சோதனை இலவசம்..!! அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட உம் அல் குவைன் அரசு..!!

Published: 12 Feb 2021, 12:58 PM |
Updated: 12 Feb 2021, 2:09 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வாரத்திற்கு ஒரு முறை PCR சோதனை செய்ய வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

PCR சோதனைக்கு அமீரகத்தில் துபாய் சுகாதார ஆணையம் 150 திர்ஹம்ஸ் , அபுதாபி ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் 85 திர்ஹம்ஸ் என கட்டணம் வசூலித்து வரும் நிலையில், உம் அல் குவைனில் கொரோனாவிற்கான PCR சோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உம் அல்-குவைன் மருத்துவ மாவட்டத்தின் முதன்மை சுகாதாரத் துறையானது உம் அல்- குவைனில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் PCR சோதனைகளானது இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

சுகாதாரத் துறையின் அனைத்து மருத்துவ மையங்களிலும் இந்த PCR சோதனைகள் இலவசமாக வழங்கப்படும் என்று உம் அல் குவைன் அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், PCR சோதனை மேற்கொள்வதற்கு அப்பாயிண்ட்மெண்ட் எதுவும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் நோய்த்தொற்று விகிதங்கள் உம் அல் குவைன் மற்றும் அமீரகத்தின் பிற பகுதிகளில் உள்ள அதிகாரிகளை கடுமையான கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து, உம் அல் குவைனில் உள்ள அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை குழு, சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக, குறிப்பாக சமூகக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான ஆய்வு பிரச்சாரங்களைத் தொடங்குவதாகவும் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) 3,307 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளையும், 3,404 பேர் கொரோனா பாதித்து குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.