துபாயில் மூன்று நாட்களுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்த RTA ..!!
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாயின் அனைத்து பொது வாகன நிறுத்துமிடங்களிலும் மூன்று நாட்களுக்கு பார்க்கிங் இலவசம் என்று அறிவித்துள்ளது. இந்த இலவச பார்க்கிங்கானது பல மாடி கட்டிட பார்க்கிங் (multi-storey parking) தவிர மற்ற அனைத்து பொது பார்க்கிங் இடங்களிலும் இலவசம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
துபாயின் துணை ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி அமைச்சருமான மறைந்த ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வியாழக்கிழமை தொடங்கி அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிகள் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச பார்க்கிங் மார்ச் 25 வியாழக்கிழமை முதல் மார்ச் 27 சனிக்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.