ADVERTISEMENT

டாக்ஸி புக்கிங்கிற்கு புதிய App-ஐ அறிமுகப்படுத்திய அஜ்மான்..!! பிடித்த எந்த வாகனத்தை வேண்டுமானாலும் புக்கிங் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிப்பு..!!

Published: 29 Mar 2021, 11:46 AM |
Updated: 29 Mar 2021, 3:52 PM |
Posted By: admin

அஜ்மானில் இருக்கக்கூடிய அஜ்மான் பொது போக்குவரத்து ஆணையம் (APTA) “Route” என்று அழைக்கப்படும் ஒரு தனியார் டாக்ஸி முன்பதிவு சேவை மொபைல் பயன்பாட்டை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. இது அப்பகுதியில் உள்ள பயணிகளுக்கு விரைவான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

APTA இன் இந்த புதிய முயற்சியானது பயணிகளின் திருப்தியை மேலும் மேம்படுத்த முயற்சிக்கிறது என்றும், பயணிகள் தங்களுக்கு விருப்பமான வாகனங்களை முன்பதிவு செய்ய தங்கள் செல்போன்களில் Route Ajman அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து APTA இயக்குநர் ஜெனரல் ஒமர் பின் ஒமர் அவர்கள் கூறுகையில் பொதுமக்களுக்கு சுமுகமான அதிகபட்ச பாதுகாப்பை அளிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை அதிகாரிகள் சிறப்பாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ரூட் அப்ளிகேஷன் பயணிகளுக்கு மிகவும் வசதியான முறையில் பயண அனுபவத்தை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.

லிமோசைன்கள் உட்பட தனக்கு பிடித்த வாகனங்களை பயணிகள் முன்பதிவு செய்வதற்கான பல விருப்பங்கள் உள்ளன என்று APTA -வின் செயல்பாட்டுத் துறை நிர்வாக இயக்குநர் உமர் லூட்டா அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அப்ளிகேஷன் iOS மற்றும் Android ஆகிய இரண்டிலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT