ADVERTISEMENT

அமீரகத்தில் புதிதாக வங்கிக்கணக்கை திறப்பது எப்படி?? தேவையான ஆவணங்கள் என்னென்ன??

Published: 26 Mar 2021, 3:51 PM |
Updated: 27 Mar 2021, 9:46 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நீங்கள் ஒரு புதிய பணி ஒப்பந்தத்தைப் பெற்ற பிறகு நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்று வங்கிக்கணக்கை திறப்பதாகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஊதிய பாதுகாப்பு அமைப்பு ஒரு பணியாளரின் சம்பளத்தை ஊழியரின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கில் மாற்றுவது முதலாளிகளுக்கு கட்டாயமாக்குகிறது.

ADVERTISEMENT

உங்கள் விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி விண்ணப்ப செயல்முறையை முடித்து இரண்டையும் பெற்றவுடன், நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் எளிதில் ஒரு வங்கிக் கணக்கைத் திறக்கலாம். குடியிருப்பாளர்களாக இல்லாமல் இருந்தால் கூட, தொழில்நுட்ப ரீதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு வங்கிக் கணக்கைத் திறக்க முடியும். ஆனால் அவர்கள் இந்த செயல்முறைக்கு விண்ணப்பிக்க தனி ஆவணங்களை வழங்க வேண்டும். ஒரு வங்கிக் கணக்கிற்கு விண்ணப்பிக்கும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், உங்கள் விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி வரும் வரை காத்திருப்பது நல்லது.

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கிளைகளைக் கொண்ட சுமார் 20 தேசிய வங்கிகள் மற்றும் கூடுதலாக சர்வதேச வங்கிகளும் உள்ளன.

ADVERTISEMENT

நீங்கள் விரும்பிய வங்கியைத் தேர்ந்தெடுத்ததும், வாங்கிக்கணக்கை திறப்பதற்காக படிவத்தை நிரப்ப வேண்டும். அத்துடன் நீங்கள் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  • உங்கள் அசல் பாஸ்போர்ட் மற்றும் ஒரு நகல்
  • எமிரேட்ஸ் ஐடி

இருப்பினும், வங்கி மற்றும் வங்கிக்கணக்கில் வகையைப் பொறுத்து, பின்வரும் விவரங்களையும் வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம்:

ADVERTISEMENT
  • நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர் என்பதை நிரூபிக்கும் விசா பக்கத்தின் நகல்.
  • சில வங்கிகளுக்கு உங்கள் ஸ்பான்சரிடமிருந்து ஆட்சேபனை சான்றிதழ் (NoC) தேவைப்படலாம்.
  • சம்பள பரிமாற்ற கணக்குகளுக்கான சம்பள சான்றிதழ்.
  • வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் கடிதம் அல்லது உங்கள் தொழிலாளர் ஒப்பந்தத்தின் நகல்.

NoC, சம்பள சான்றிதழ், பே ஸ்லிப் (Pay Slip) அல்லது அப்பாயிண்ட்மெண்ட் கடிதத்திற்காக உங்கள் நிறுவனத்தின் HR-இடம் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

இந்த செயல்முறையை ஆன்லைனில் செய்யலாமா?

பல வங்கிகள் இப்போது வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. நீங்கள் செயல்முறையை முடித்ததும், நீங்கள் ஒரு குறிப்பு எண்ணைப் (reference number) பெறுவீர்கள், மேலும் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவுடன் உங்கள் வங்கிக்கணக்கை அணுக முடியும். வங்கிக்கணக்கை செயல்படுத்துவதற்கு வங்கிகளை பொறுத்து சில மணிநேரங்கள் முதல் இரண்டு வேலை நாட்கள் வரை ஆகலாம்.