ADVERTISEMENT

அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பு..!! ஏப்ரல் மாதத்திற்கான எரிபொருள் விலையை அறிவித்த எரிபொருள் விலைக்கான குழு..!!

Published: 28 Mar 2021, 3:54 PM |
Updated: 28 Mar 2021, 3:55 PM |
Posted By: admin

மார்ச் மாதம் முடிவடையவிருப்பதை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான எரிபொருள் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலைக்கான குழுவானது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வெளியிட்டுள்ளது. தற்பொழுது வெளியிட்ட அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது ஏப்ரல் மாதத்தில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏப்ரல் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை பின்வருமாறு

  • சூப்பர் 98: மார்ச் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.12 திர்ஹமில் இருந்து தற்பொழுது 2.29 திர்ஹமாக 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
  • சூப்பர் 95: மார்ச் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.01 திர்ஹமில் இருந்து தற்பொழுது 2.17 திர்ஹமாக 8 சதவீதம் உயர்ந்துள்ளது
  • டீசல்: மார்ச் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.15 திர்ஹமில் இருந்து தற்பொழுது 2.22 திர்ஹமாக 3 சதவீதம் உயர்ந்துள்ளது.

அமீரகத்தில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. முன்னதாக, உலகலாவிய அளவில் எண்ணெய் விலைகள் அதிகரித்த போதிலும் பிப்ரவரி வரை தொடர்ச்சியாக 11 மாதங்களுக்கு அமீரக அரசாங்கம் எரிபொருள் விலையை மாற்றாமல் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT