ADVERTISEMENT

UAE : 14 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும் நோன்பு..!! இந்த வருடத்திற்கான ரமலான் மாத நோன்பு நேரத்தை கணக்கிட்ட வானியலாளர்..!!

Published: 3 Apr 2021, 3:01 PM |
Updated: 3 Apr 2021, 3:21 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருடத்திற்கான புனித ரமலான் மாதம் 30 நாட்கள் நீடிக்கும் என்று வானியல் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இந்த ரமலான் மாதமானது வரும் ஏப்ரல் 13 செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்று வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் அரபு ஒன்றியத்தின் உறுப்பினர் இப்ராஹிம் அல் ஜர்வான் தெரிவித்துள்ளார். மேலும் ரமலான் மாதம் முடிந்து ஆரம்பிக்கும் ஷவ்வால் மாதம் மே 13 வியாழக்கிழமை துவங்கும் என்றும் எனவே, இந்த வருட ஈத் அல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் மே 13 ம் தேதி கொண்டாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வானியல் ஆய்வாளர்கள் அமீரகத்தில் இந்த வருடத்திற்கான நோன்பின் நேரத்தையும் தெரிவித்துள்ளனர். அதன்படி, ரமலான் முதல் நாள் அபுதாபியில் அதிகாலை 4.43 மணிக்கு நோன்பு தொடங்கும் மற்றும் இஃப்தார் மாலை 6.47 மணிக்கு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது முதல் நோன்பானது ஒரு நாளில் 14 மணி நேரம் நான்கு நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

அதே போல், ரமலான் மாதத்தின் 30 ம் நோன்பானது, அதிகாலை 4.15 மணிக்கு தொடங்கி இரவு 7.01 மணிக்கு முடிவடையும் என்றும், இதனால் இறுதி நோன்பானது ஒரு நாளில் 14 மணி முதல் 46 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸஹர் எனும் நோன்பு வைக்கக்கூடிய நேரம் மற்றும் இஃப்தார் நேரங்களைப் பொறுத்தவரை ஃபுஜைராவும் கொர்ஃபக்கனும் அபுதாபியை விட 7 நிமிடங்கள் முன்னதாகவே இருக்கும் என்றும் அல் குவைபாத் மற்றும் அல் சிலா 11 நிமிடங்கள் பின்னால் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனை வைத்து பார்க்கும் பொழுது ஃபுஜைராவுக்கும் அல் குவைஃபாத்துக்கும் இடையிலான நேர வேறுபாடு 18 நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.