ADVERTISEMENT

இஃப்தார் நேரங்களில் வாகனங்களுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்த துபாய்..!!

Published: 13 Apr 2021, 3:32 AM |
Updated: 13 Apr 2021, 7:24 AM |
Posted By: admin

ரமலான் மாதம் துவங்கியதைத் தொடர்ந்து துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் குடியிருப்பாளர்கள் நோன்பு திறக்கக்கூடிய இஃப்தார் நேரங்களில் இலவச பார்க்கிங்கை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள அறிவிப்பில் பார்க்கிங் கட்டணம் பின்வருமாறு செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.

அதன்படி, சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும், இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

T-com (F குறியிடப்பட்ட பார்க்கிங்) கட்டணம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வசூலிக்கப்படும் என்றும், மல்டி லெவல் பார்க்கிங் டெர்மினல்களில், கட்டணம் 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.