அமீரக செய்திகள்
UAE: மே மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏப்ரல் மாதம் நிறைவடைவதை முன்னிட்டு மே மாதத்திற்கான எரிபொருள் விலையை அமீரகத்தின் எரிபொருள் விலைக்குழு அறிவித்துள்ளது.
அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மாறாமல் கடந்த பிப்ரவரி மாதம் வரை ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் மே மாதத்திற்கான டீசல் விலையானது குறைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதத்திற்கான எரிபொருள் விலை பின்வருமாறு:
- சூப்பர் 98 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.29 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் மே மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.30 திர்ஹமாக சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
- ஸ்பெஷல் 95 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.17 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் மே மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.18 திர்ஹமாக சற்று உயர்த்தப்பட்டுள்ளது
- டீசல் : ஏப்ரல் மாதத்தில் 2.22 திர்ஹமாக விற்கப்படும் நிலையில் மே மாதம் முதல் லிட்டருக்கு 2.17 திர்ஹமாக குறைக்கப்பட்டுள்ளது.
May fuel prices have been released by the UAE Fuel Price Committee.#ADNOCDistribution pic.twitter.com/hYwzKq8mMt
— ADNOC Distribution (@ADNOCdist) April 29, 2021