ADVERTISEMENT

அமீரக வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு.. 7,000 திர்ஹம் வரை மாத சம்பளம்.. ஒரு வாரம் நடைபெறும் நேர்முகத் தேர்வு..!!

Published: 27 Apr 2021, 10:28 AM |
Updated: 27 Apr 2021, 10:28 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் வங்கித் துறையில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு தற்பொழுது ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒரு மாதத்திற்கு 7,000 திர்ஹம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு உள்ளூர் வங்கி, ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான சேல்ஸ் எக்ஸிக்யூடிவ்களை பணியமர்த்துவதற்கான நேர்முகத் தேர்வை நடத்தவுள்ளது.

மேலும் ஒரு மாதத்திற்கு 5,000 முதல் 7,000 திர்ஹம் வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறந்த வங்கியில் பணிபுரிய நடத்தப்படும் இந்த நேர்முகத் தேர்வுக்கு ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நல்ல பேச்சுத் திறமை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரெடிட் கார்டுகள், லோன், இன்சுரன்ஸ் போன்றவற்றில் இரண்டு ஆண்டுகள் வரை விற்பனை அனுபவம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் விசிட் மற்றும் டிரான்ஸ்ஃபெரபிள் விசா வைத்திருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

நேர்காணல்களுக்கு வரும் நபர்கள் தங்களின் CV மற்றும் சான்றுகளை உடன் கொண்டு வருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள் : ஏப்ரல் 28 முதல் மே 5 வரை (வெள்ளிக்கிழமை தவிர)

நேரம் : காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

இடம் : அல் மசூத் டவர் 2, அலுவலக எண் 302, போர்ட் சயீத், தேரா