ADVERTISEMENT

UAE: பொது கட்டண பார்க்கிங் நேரத்தை நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்த ஷார்ஜா முனிசிபாலிட்டி..!!

Published: 8 Apr 2021, 5:09 PM |
Updated: 8 Apr 2021, 6:31 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் ரமலான் மாதம் தொடங்கவிருப்பதால் சார்ஜாவில் பொது பார்க்கிங் இடங்களில் கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் நேரமானது நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஷார்ஜா முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜா முனிசிபாலிட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்துவதற்கு காலை 8 மணி முதல் 12 மணி வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. ஷார்ஜாவில் வழக்கமாக வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டண பார்க்கிங் நேரம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் மாதத்தின் வருகையை முன்னிட்டு நகராட்சியில் மேற்கொள்ளவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் குடிமை அமைப்பு (civic body) பூர்த்தி செய்துள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பை ஷார்ஜா முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT