அமீரக செய்திகள்
UAE கொரோனா அப்டேட் (ஏப்ரல் 29): பாதிக்கப்பட்டோர் 1,961 பேர்..!! 4 பேர் உயிரிழப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2021) புதிதாக 1,961 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 518,262 ஆக உயர்ந்துள்ளது.
அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,584 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 1,803 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 498,943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.