ADVERTISEMENT

ரமலானை முன்னிட்டு அமீரகத்தில் தனியார் துறைகளுக்கான வேலை நேரத்தை அறிவித்த MOHRE..!!

Published: 10 Apr 2021, 4:34 PM |
Updated: 10 Apr 2021, 4:34 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலானை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் அமீரகத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் வேலை நேரமானது குறைக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதே போல், இந்த வருடமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து தனியார் துறை தொழிலாளர்களுக்கும் ரமலானை முன்னிட்டு வழக்கமான வேலை நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டிருப்பதாக மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக அமீரகத்தில் உள்ள அரசு சார்ந்த வேலை செய்யும் ஊழியர்களுக்கு ரமலான் மாதத்தில் பணிபுரியும் வேலை நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்திருந்தது. தற்பொழுது அதனை தொடர்ந்து தனியார் துறைக்கும் வேலை நேரம் குறித்த அறிவிப்பை மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இருப்பினும் அத்தியாவசிய தேவைக்காக வேலை செய்ய வேண்டிய ஊழியர்களுக்கு இந்த நேரங்கள் பொருந்தாது என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. அமீரகத்தில் இந்த வருட ரமலான் நோன்பானது வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT