ஐக்கிய அரபு அமீரகத்தில் மாதம் 6,000 திர்ஹம் வரை சம்பளம் அளிக்கும் வகையில் 50 பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. மேலும், வேலைக்கு விண்ணப்பிக்கும் நபரின் திறமை, செயல்திறனைப் பொறுத்து கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு மற்றும் பெர்சனல் லோனிற்கான சேல்ஸ் ஆஃபீசர் பதவிக்காக மேற்கொள்ளப்படும் இந்த நேர்காணலானது மூன்று நாட்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
6,000 திர்ஹம் வரை சம்பளம் அளிக்கக்கூடிய இந்த வேலைக்கு இணைய இரண்டு வருட வேலை அனுபவம் கொண்ட, சிறந்த பேச்சுத்திறமை மற்றும் ஆளுமைத்திறன் கொண்ட ஆண் மற்றும் பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் உடனடியாக பணியில் இணைவதற்காக நேர்காணல் செல்லும் நபர்கள் தங்களின் CV மற்றும் சான்றுகளைக் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அமீரக விசிட் விசா அல்லது ட்ரான்ஸ்ஃபெரபிள் விசா (transferrable visa) வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அமீரக தொழிலாளர் சட்ட விதிமுறையின்படி, மாத சம்பளம் மற்றும் கூடுதல் சலுகைகள் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நேர்முகத்தேர்வானது திங்கள்கிழமை (ஏப்ரல் 12) தொடங்கி துபாயில் உள்ள அல் மசூத் டவர் 2 (Al Masaood Tower 2), அலுவலக எண் 302, போர்ட் சயீத் (port saeed), தேரா (Deira), துபாயில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.