ADVERTISEMENT

துபாய்: ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களுக்கான மெட்ரோ, பேருந்துகள் மற்றும் டிராம்களின் சேவை நேரங்கள் அறிவிப்பு..!!

Published: 10 May 2021, 1:52 AM |
Updated: 10 May 2021, 4:51 AM |
Posted By: admin

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களுக்கான மெட்ரோ, பேருந்துகள் மற்றும் டிராம்களின் சேவை நேரங்களை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

துபாய் மெட்ரோ ரெட் லைன்:

புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மெட்ரோ அதிகாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை இயங்கும். வெள்ளிக்கிழமையில் காலை 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை இயங்கும் மற்றும் சனிக்கிழமை முதல் அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்கும்.

துபாய் மெட்ரோ கிரீன் லைன்:

புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை செயல்படும் மற்றும் வெள்ளிக்கிழமையில் காலை 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை செயல்படும். சனிக்கிழமை முதல் காலை 5.30 முதல் நள்ளிரவு 12 வரை செயல்படும்.

ADVERTISEMENT

பேருந்துகள்

முக்கிய பேருந்து நிலையங்கள் (main stations) அதிகாலை 4.30 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கும். அல் குபைபா பேருந்து நிலையம் அதிகாலை 4.15 முதல் அதிகாலை 1 மணி வரை இயங்கும்.

துணை பேருந்து நிலையங்கள் (sub stations) காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். இருப்பினும், ரூட் C01 மட்டும் முழு நேரமும் செயல்படும்.

ADVERTISEMENT

அல் குசைஸ் பேருந்து நிலையம், அதிகாலை 4.30 மணி முதல் நள்ளிரவு 12.04 மணி வரையிலும் அல் கூஸ் இண்டஸ்ட்ரியல் நிலையம் காலை 5.05 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலும் மற்றும் ஜபெல் அலி நிலையம் அதிகாலை 4.58 முதல் நள்ளிரவு 12:15 மணி வரையிலும் இயங்கும்

துபாய் டிராம்

புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரையிலும் வெள்ளிக்கிழமை, காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரையிலும் செயல்படும். அதே போல் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரையிலும் டிராம் இயக்கப்படும்.

வாகனங்களின் தொழில்நுட்ப சோதனை

சேவை வழங்குநர் மையங்கள் (வாகனங்களின் தொழில்நுட்ப சோதனை) மற்றும் கஸ்டமர் ஹாப்பினஸ் சென்டர் ரமலான் 29 முதல் ஷவ்வால் மாதம் 3 ம் தேதி வரை மூடப்படும். உம் ராமூல், தேரா, அல் பார்ஷா, அல் மனாரா மற்றும் RTA தலைமை அலுவலகத்தில் உள்ள ஸ்மார்ட் கஸ்டமர் ஹாப்பினஸ் சென்டர் வழக்கம் போல் முழு நேரமும் தொடர்ந்து இயங்கும்.