ADVERTISEMENT

அமீரக வங்கித் துறையில் வேலை..!! 5,000 திர்ஹம் வரை மாத சம்பளம்..!! இரு நாட்கள் நடைபெறவிருக்கும் நேர்காணல்..!!!

Published: 18 May 2021, 1:40 PM |
Updated: 19 May 2021, 4:45 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் வங்கித் துறையில் பணிபுரிய முயற்சிப்பவர்களுக்கு அமீரகத்தின் முதன்மை வங்கியில் பணிபுரியும் வாய்ப்பு தற்பொழுது உள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக வங்கிகளில் விற்பனை அதிகாரிகளின் (sales officers) வேலைகளுக்காக இரண்டு நாள் நடைபெறும் நேர்காணல் புதன்கிழமை (மே 19) தொடங்கவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு 5,000 திர்ஹம் வரை சம்பளம் மற்றும் விற்பனை இலக்குகளை (sales targets) அடைந்தால் பிற சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்காக விண்ணப்பிக்கும் நபர்கள் இஸ்லாமிய நிதி மற்றும் வழக்கமான வங்கித் துறையில் (Islamic finance and conventional banking sector) ஐக்கிய அரபு அமீரகத்தில் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தனிநபர் கடன் விற்பனை அனுபவம் (personal loan sales experience), சிறந்த பேச்சுத்திறமை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் ஒருவேளை நேர்காணல் முடிந்து வேலை கிடைத்து விட்டால் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டிப்ளோமா அல்லது அதற்கு சமமான படிப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும் அரபு, ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான நேர்காணல்கள் மே 19 மற்றும் மே 20 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மசூத் டவர் 2, அலுவலக எண் 302-304, அல் புத்தைம் டொயோட்டா ஆட்டோ மால், போர்ட் சயீத், தேரா, துபாயில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT