ADVERTISEMENT

அபுதாபி: ஈத் விடுமுறையை முன்னிட்டு வாகனங்களுக்கு பார்க்கிங், டோல் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிப்பு..!!

Published: 11 May 2021, 2:50 AM |
Updated: 11 May 2021, 2:51 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்கள் ஆரம்பிப்பதை முன்னிட்டு இந்த விடுமுறை நாட்கள் முழுவதும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என அபுதாபியில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈத் விடுமுறை நாட்களில் வாகன ஓட்டிகளுக்கு டோல் கேட் கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC), ஈத் விடுமுறை நாட்களில் (மே 11 செவ்வாய்க்கிழமை, ரமலான் 29 தொடங்கி ஷவ்வால் மாதம் 3 ம் தேதி வரை) வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் எனவும், கூடுதலாக, முசாஃபா இண்டஸ்ட்ரியல் ஏரியாவின் வாகன நிறுத்துமிடம் M18 பகுதியிலும் இலவசமாக வாகனங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிப்ட்டுள்ளது.

பொது மக்கள் அனைவரும் மவாக்கிஃப் (mawaqif) விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், தங்கள் வாகனங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளில் நிறுத்தவோ அல்லது போக்குவரத்து ஓட்டத்தை தடுக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் ரெஸிடெண்ட் பார்க்கிங் தொடர்பான மவாகிஃப் விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 8 மணி் வரை ரெஸிடெண்ட் பார்க்கிங் இடங்களில் வாகன ஓட்டிகள் வாகனங்களை பார்க்கிங் செய்தால் அதற்கு 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டார்ப் டோல் கேட் சிஸ்டம்

ஈத் அல் ஃபித்ர் விடுமுறை நாட்களில் டார்ப் டோல் கேட்களில் கட்டணம் வசூலிக்கப்படாது என ITC அறிவித்துள்ளது. ஈத் விடுமுறை முடிந்ததும் டோல் கேட் கட்டணங்கள் மீண்டும் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, டோல் கேட் கட்டணம் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை வசூலிக்கப்படும்.

ADVERTISEMENT

புனித ரமலான் மாதத்தில் ITC டோல் கேட் கட்டண நேரங்களை (காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை) திருத்தியமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கஸ்டமர்ஸ் ஹாப்பினஸ் சென்டர்ஸ்

அனைத்து கஸ்டமர் ஹாப்பினஸ் சென்டர்களும் ஈத் விடுமுறையின் போது மூடப்பட்டு மே 16 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்பட தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவைகள்

ஈத் அல் பித்ர் விடுமுறையின் போது, ​​அபுதாபியில் பொது பேருந்து சேவை நேரங்கள் வெள்ளி மற்றும் பொது விடுமுறை நாட்களுக்கான அட்டவணையைப் பின்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.