ADVERTISEMENT

பல மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படவுள்ள DXB டெர்மினல்-1.. 3,500 வேலைவாய்ப்புகள் உருவாகும் என தகவல்..!!

Published: 21 Jun 2021, 8:22 AM |
Updated: 21 Jun 2021, 9:13 AM |
Posted By: admin

கொரோனா வைரஸ் தொற்று உலகில் பரவ ஆரம்பித்தன் விளைவாக கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த துபாய் விமான நிலையத்தின் (DXB) டெர்மினல் 1 பகுதி இந்த வாரம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதன் விளைவால், 3500 வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்படும் என்று துபாய் விமான நிலையத்தின் CEO பால் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மீண்டும் செயல்பாடுகள் துவங்கவிருப்பதை முன்னிட்டு இந்த வேலைகள் DXB, விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையத்தின் பிற பார்ட்னர்களால் உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிஃபித்ஸ் கூறுகையில், “டெர்மினல் 1 க்கு 66 விமான நிறுவனங்களின் செயல்பாடுகளை மாற்றியமைப்பது என்பது ஒரு பெரிய அளவிலான செயல்பாட்டைக் குறிக்கிறது. இதன் காரணமாக, செக்-இன் செயல்பாட்டை நிர்வகிக்கவும், செயல்முறை மூலம் மக்களுக்கு உதவவும் எங்களுக்கு அதிகமான ஆட்கள் தேவை.”

ADVERTISEMENT

“எங்கள் கமர்ஷியல் பார்ட்னர்கள் நிலைமை மீண்டும் இயல்புக்கு திரும்புவதை தெளிவாகக் காண்கின்றனர். சில வேலைகள் மீண்டும் செயல்படுத்தப்படுவதற்கு காத்திருக்கின்றன, அவற்றில் சிலர் பணியமர்த்தப்பட உள்ளனர்”என்று கூறியுள்ளார்.

ஜூன் 24 முதல் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1 மீண்டும் திறக்கப்பட இருப்பதையொட்டி, துபாய் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் திறன் இந்த ஆண்டு எட்டு சதவீதம் அதிகரித்து 28 மில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு கொரோனா பரவலை அடுத்து 15 மாதங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து டெர்மினல் 1 மீண்டும் திறக்கப்பட உள்ளது.

விமான பயணத் துறை மீண்டு நாடுகள் தங்கள் எல்லைகளை மீண்டும் திறக்க ஆரம்பித்துள்ளதால் விமான சேவை இயக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“உலகெங்கிலும் உள்ள நாடுகள் கொரோனா நிலைமையை சமாளிக்கத் தொடங்கியுள்ளன. மேலும் அமீரகத்தில் பள்ளி விடுமுறைகள், ஈத் அல் அத்ஹா, எக்ஸ்போ 2020 போன்றவை அடுத்தடுத்து வருவதால், அடுத்த சில மாதங்களில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பயணங்களில் பெரும் முன்னேற்றம் காணப்படும்” என்று கிரிஃபித்ஸ் கூறியுள்ளார்.

மேலும், டெர்மினல் 1 ஐ ஜூன் 24 முதல் மீண்டும் திறப்பதன் மூலம், டெர்மினல் 3 இலிருந்து மீண்டும் டெர்மினல் 1 க்கு இயங்கும் 66 விமான நிறுவனங்கள் மாற்றியமைக்கப்படும். இது வருகையின் போது எடுக்கப்படும் PCR சோதனைக்கான சேவையை சிறந்த முறையில் வழங்க உதவுகிறது”என்று அவர் கூறினார்.

அத்துடன் “வரும் இலையுதிர்காலத்தில், நாங்கள் தொற்றுநோய்க்கு முந்தைய இயக்கத்தின் அசல் திறனில் 90 சதவீதத்தை நெருங்குவோம் என எதிர்பார்க்கிறோம்”

“இந்தியா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா நாடுகளில் இருந்து விமான சேவைகள் மீண்டும் திறம்பட இயக்குவது விமான நிலையத்தின் பயணங்களில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்”  என்றும் கிரிஃபித்ஸ் கூறியுள்ளார்.

2020 ஆம் ஆண்டில், பயணிகள் போக்குவரத்து 70 சதவீதம் சரிந்து 2019 ல் 86.4 மில்லியனில் இருந்து 25.9 மில்லியனாக இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.