ADVERTISEMENT

Covid19: விசிட், சுற்றுலா விசா உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசியை வழங்க ஆரம்பித்துள்ள அபுதாபி..!!

Published: 22 Jun 2021, 12:21 PM |
Updated: 22 Jun 2021, 12:25 PM |
Posted By: admin

வெளிநாடுகளில் இருந்து விசிட் விசா மற்றும் டூரிஸ்ட் விசா மூலம் அபுதாபி வந்துள்ளவர்கள் கொரோனாவிற்கான தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விசாவானது அபுதாபி அரசால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அமீரகத்தின் பிற பகுதிகளில் வழங்கப்பட்டிருக்கும் விசாவிற்கு இது பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி சுகாதார சேவைகள் நிறுவனத்தின் (SEHA) கால் சென்டர் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ” செல்லுபடியாகும் விசிட் விசாக்கள் மற்றும் சுற்றுலா விசாக்கள் வைத்திருப்பவர்கள் அபுதாபியில் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் SEHA app மூலம் முன்பதிவு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.

விசிட் விசா வைத்திருப்பவர் அல்லது சுற்றுலாப் பயணி எவ்வாறு App மூலம் பதிவு செய்யலாம் என்று கேட்டதற்கு, நிர்வாகி கூறுகையில், “தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்ய உங்கள் விசாவில் உள்ள UID எண்ணை பயன்படுத்தலாம். அவர்கள் அதை தங்கள் பாஸ்போர்ட்களில் காணலாம்.” என கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், விசிட் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சினோபார்ம் அல்லது ஃபைசர் ஆகிய இரண்டு தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றைப் போட்டுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்ய தனிநபர்கள் அமீரக தொலைபேசி எண்ணையும் வைத்திருக்க வேண்டும். விசா வைத்திருப்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் 800 50 ஐ அழைப்பதன் மூலம் அப்பாய்மெண்ட் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஜூன் 11 அன்று, அபுதாபியில் காலாவதியான ரெசிடென்ஸ் அல்லது நுழைவு விசாக்களில் வசிக்கும் மக்கள் மற்றும் காலாவதியான விசிட் விசாக்கள் உட்பட அனைவரும் தடுப்பூசியினை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

காலாவதியான ரெசிடென்ஸ் மற்றும் நுழைவு விசா வைத்திருப்பவர்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி..!! அபுதாபி ஒப்புதல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தடுப்பூசி பிரச்சாரம் மூலம் தடுப்பூசி போட தகுதியுள்ள நபர்களின் எண்ணிக்கையில் 87 சதவீதத்திற்கும் அதிகமாக வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 14.5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிக்கான டோஸ்கள் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.