ADVERTISEMENT

துபாய்: பாம் ஜூமேரா மோனோ ரயிலில் இலவசமாக பயணம் செய்ய அரிய வாய்ப்பு..!!

Published: 14 Jun 2021, 7:52 AM |
Updated: 14 Jun 2021, 8:49 AM |
Posted By: admin

துபாயில் இருக்கும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான பாம் ஜுமேராவிற்கென தனி மோனோ ரயில் இயக்கப்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

ADVERTISEMENT

இந்த தி பாம் மோனோரெயிலில் குடியிருப்பாளர்களும் சுற்றுலாவாசிகளும் இந்த வாரம் இலவசமாக பயணம் செய்யலாம் என்று நக்கீல் பிராபர்டீஸ் தெரிவித்துள்ளது.

நக்கீல் கம்யூனிட்டி மேனேஜ்மென்ட் அனுப்பிய அறிவிப்பின்படி, “துபாய் முனிசிபாலிட்டியானது மெரினா ரெசிடென்ஸ் மற்றும் நக்கீல் மால் இடையே உள்ள பாம் ஜுமேரா எக்ஸிட் சாலையில் ஜூலை 9 முதல் சாலைப்பணிகளை மேற்கொள்ளும்”.

ADVERTISEMENT

“இந்த நேரத்தில் எந்தவொரு சேவைகளுக்கும் எந்த இடையூறும் ஏற்படாது” என்று பாம் ஜூமேராவின் டெவலப்பர் நக்கீல் கூறியுள்ளது.

“தயவுசெய்து வாகன ஓட்டிகள் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தில் உள்ள டைவர்சன்களைப் (diversions) பின்பற்றி பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும். மேலும் சாலைப் பணிகள் நிறைவடையும் வரை குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தி பாம் மோனோரெயிலை இலவசமாகப் பயன்படுத்தலாம்” என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வழக்கமாக பாம் ஜூமேரா போய் வருவதற்கென ஒரு சுற்று-பயண டிக்கெட்டுக்கு வழக்கமாக 15 முதல் 30 திர்ஹம் வரை செலவாகும். அதே நேரத்தில் ஒரு முறை பயணம் செய்ய 10 முதல் 20 திர்ஹம் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு நாள் முழுவதுமான அணுகலுக்கான பாஸ் பெற பொதுவாக 35 திர்ஹம் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் இயங்கும் நேரமானது காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையாகும் மற்றும் ஒவ்வொரு புறத்தில் இருந்தும் ஆறு நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படும்.

பாம் ஜுமேரா என்பது துபாயின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும், மேலும் இது துபாய் நகரின் கடற்கரைக்கு 50 மைல்களுக்கு அருகில் உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், தி வ்யூ அட் தி பாம் – The View at The Palm எனும் இடத்தை நக்கீல் திறந்திருக்கின்றது. இங்கு பாம் ஜுமீராவின் 360 டிகிரி காட்சியைப் பார்வையாளர்கள் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.