ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு ஜூலை 21 வரை விமான சேவை இல்லை..!! எதிஹாட் தகவல்..!!

Published: 29 Jun 2021, 9:52 AM |
Updated: 29 Jun 2021, 10:02 AM |
Posted By: admin

இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவையானது ஜூலை 21 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அபுதாபியை தளமாகக் கொண்ட எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தற்போது நிலவும் கொரோனா நிலைமை காரணமாக விமான இடைநீக்கத்தை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

விமான சேவை துவங்குவது குறித்த பயணிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த, ​​எட்டிஹாட் ஏர்வேஸ் “பயணத் தடை நீட்டிப்பு குறித்து சில புதுப்பிப்புகளை நாங்கள் எதிர்பார்த்தோம். இந்நிலையில் சற்று முன்பு எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விமானத் தடை இன்னும் நீக்கப்படவில்லை மற்றும் ஜூலை 21 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியும். எங்கள் வலைத்தளம் விரைவில் புதுப்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஜூலை 7 முதல் இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை எதிர்பார்க்கிறது எனவும், ஆனால் சரியான பயண நெறிமுறைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடமிருந்து பொருத்தமான அனுமதிகளுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GCAA) வெளியிட்டுள்ள Notam-ஐ மேற்கோளிட்டு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு அந்நாடுகளில் இருந்து அமீரகம் பயணிப்பதற்கான தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது என ஊடகங்களில் தகவல் கூறப்பட்டு வந்தன. இதற்கு விளக்கமளிக்கும் பொருட்டு இந்தியாவில் இருந்து அமீரகம் பயணிக்க மறு அறிவிப்பு வரும் வரையிலும் தடை இருக்கும் என GCAA உறுதிபடுத்தியது குறிப்பிடத்தக்கது.